• May 18 2024

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் புதிய சட்டம்..! உரிய தரப்புடன் இதுவரை கலந்துரையாடவில்லை- சுமந்திரன் குற்றச்சாட்டு..!samugammedia

Sharmi / Jun 6th 2023, 10:33 am
image

Advertisement

அரசாங்கம் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்தாலும் அது குறித்து கேட்டறிய வேண்டிய தரப்புடன் இதுவரை கலந்துரையாடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
 
எம்.ஏ.சுமந்திரன்  மேலும் தெரிவிக்கையில்,

உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமான ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டமூல வரைவின் ஊடாக இலங்கையின் இறுதி போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ள குறைந்தபட்ச நீதியையோ, நியாயத்தையோ நிறைவேற்ற தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் காணாமல் போனவர்களுக்காக அவர்கள் நியாயத்தை எதிர்பார்க்கின்றனர்.

யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் 2 ஆயிரம் நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்தாலும் அது குறித்து கேட்டறிய வேண்டிய தரப்புடன் இதுவரை கலந்துரையாடவில்லை.

உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் உருவாக்கியுள்ள சட்டமூல வரைவு குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. எனினும் அதில் பொறுப்புக்கூறல் பற்றிய எந்த விடயங்களும் இல்லை.

கடந்த பல வருடங்களாக 15 ஆணைக்குழுக்களின் முன்னிலையில் போர் காரணமாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

அந்த சாட்சியங்களின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான செயலகம் விசாரணைகளை நடத்தியது.இந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றத்தையும் காணக்கிடைக்கவில்லை.பரணகம ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்களை மீண்டும் மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைப்பது மாத்திரமே நடந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் புதிய சட்டம். உரிய தரப்புடன் இதுவரை கலந்துரையாடவில்லை- சுமந்திரன் குற்றச்சாட்டு.samugammedia அரசாங்கம் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்தாலும் அது குறித்து கேட்டறிய வேண்டிய தரப்புடன் இதுவரை கலந்துரையாடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன்  மேலும் தெரிவிக்கையில், உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமான ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டமூல வரைவின் ஊடாக இலங்கையின் இறுதி போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ள குறைந்தபட்ச நீதியையோ, நியாயத்தையோ நிறைவேற்ற தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இறுதிக்கட்டப் போரின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் காணாமல் போனவர்களுக்காக அவர்கள் நியாயத்தை எதிர்பார்க்கின்றனர்.யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் 2 ஆயிரம் நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசாங்கம் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்தாலும் அது குறித்து கேட்டறிய வேண்டிய தரப்புடன் இதுவரை கலந்துரையாடவில்லை.உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் உருவாக்கியுள்ள சட்டமூல வரைவு குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. எனினும் அதில் பொறுப்புக்கூறல் பற்றிய எந்த விடயங்களும் இல்லை.கடந்த பல வருடங்களாக 15 ஆணைக்குழுக்களின் முன்னிலையில் போர் காரணமாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.அந்த சாட்சியங்களின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான செயலகம் விசாரணைகளை நடத்தியது.இந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றத்தையும் காணக்கிடைக்கவில்லை.பரணகம ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்களை மீண்டும் மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைப்பது மாத்திரமே நடந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement