• Nov 15 2024

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” பொலிஸாரால் கைது!

Tharmini / Nov 9th 2024, 3:54 pm
image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” என்பவர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், களுத்துறை, வென்தேசிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் களுத்துறை, நாகொடை, பயாகலை மற்றும் வென்தேசிவத்த ஆகிய பிரதேசங்களில் பல்வேறு நபர்களிடம் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அவர்களை அச்சுறுத்தித் தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபற் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” பொலிஸாரால் கைது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” என்பவர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், களுத்துறை, வென்தேசிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் களுத்துறை, நாகொடை, பயாகலை மற்றும் வென்தேசிவத்த ஆகிய பிரதேசங்களில் பல்வேறு நபர்களிடம் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அவர்களை அச்சுறுத்தித் தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், சந்தேகநபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபற் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement