• Oct 30 2024

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..! samugammedia

Chithra / Jun 4th 2023, 1:57 pm
image

Advertisement

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் நிதின் கோபி. இவர் பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதான நடிகர் நிதின் கோபி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன். இவர் விஷ்ணுவர்தன் நடித்த 'ஹலோ டாடி' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். மேலும் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


அத்துடன் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள இட்டமடு பகுதியில் தன் பெற்றோருடன் வசிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் நிதின் கோபி வீட்டில் உள்ளபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, வரும் வழியிலயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

39 வயதான நிதினின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய திரையுலகம். samugammedia கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் நிதின் கோபி. இவர் பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதான நடிகர் நிதின் கோபி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிதின் திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன். இவர் விஷ்ணுவர்தன் நடித்த 'ஹலோ டாடி' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். மேலும் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அத்துடன் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள இட்டமடு பகுதியில் தன் பெற்றோருடன் வசிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் நிதின் கோபி வீட்டில் உள்ளபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, வரும் வழியிலயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.39 வயதான நிதினின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement