• Jul 08 2024

தலை முடியில் டீ பாத்திரமாக வடிவமைத்து சிகை அலங்கார பெண்- தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள்!

Tamil nila / Jul 5th 2024, 7:49 pm
image

Advertisement

ஈரான் நாட்டை சேர்ந்த சிகை அலங்கார பெண் நிபுணர், ஒரு இளம் பெண்ணின் தலை முடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை வைரலாகி வருகின்றது. 

இக் காலக்கட்டத்தில் தலை முடியை வித்தியாசமாக கத்தரித்து சில உருவங்களை வடிவமைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இது வரை நீங்கள் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய் அசத்தியிருக்கிறார்.

முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் நிறுத்துகிறார். அதைச் சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டுகிறார். 

இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி விடுகிறார். இறுதியில் டீ பாத்திர வடிவம் வந்ததும் அதில் தண்ணீரையோ அல்லது ஆறிய டீயையோ ஊற்றி மற்றொரு பாத்திரத்திலும், டீ கோப்பையிலும் நிரப்பிக் காட்டுகிறார். 

பானம் தலையில் வேறு எந்த இடத்தின் வழியாகவும் கசியாமல், பாத்திரத்தின் வாய் வழியாக மட்டும் அழகாக வெளியேறுகிறது.

மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். பலரும் இந்த சிகையலங்காரத்தை வியந்து கருத்து பதிவிட்டனர். 

தலை முடியில் டீ பாத்திரமாக வடிவமைத்து சிகை அலங்கார பெண்- தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் ஈரான் நாட்டை சேர்ந்த சிகை அலங்கார பெண் நிபுணர், ஒரு இளம் பெண்ணின் தலை முடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை வைரலாகி வருகின்றது. இக் காலக்கட்டத்தில் தலை முடியை வித்தியாசமாக கத்தரித்து சில உருவங்களை வடிவமைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.இது வரை நீங்கள் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய் அசத்தியிருக்கிறார்.முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் நிறுத்துகிறார். அதைச் சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டுகிறார். இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி விடுகிறார். இறுதியில் டீ பாத்திர வடிவம் வந்ததும் அதில் தண்ணீரையோ அல்லது ஆறிய டீயையோ ஊற்றி மற்றொரு பாத்திரத்திலும், டீ கோப்பையிலும் நிரப்பிக் காட்டுகிறார். பானம் தலையில் வேறு எந்த இடத்தின் வழியாகவும் கசியாமல், பாத்திரத்தின் வாய் வழியாக மட்டும் அழகாக வெளியேறுகிறது.மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். பலரும் இந்த சிகையலங்காரத்தை வியந்து கருத்து பதிவிட்டனர். 

Advertisement

Advertisement

Advertisement