• Nov 28 2024

ஈழத்தேசிய விடுதலையை ஆழ நேசித்தவர் விஜயகாந்த் - சிறீதரன் எம்.பி..!samugammedia

Tharun / Jan 3rd 2024, 8:05 pm
image

தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள், ஈழத்தேசிய விடுதலையையும், தமிழின விடுதலைப் போராட்டத்தையும், தமிழினத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களையும் ஆழ நேசித்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின், கிளிநொச்சி நகர வட்டாரக் கிளையினரது ஏற்பாட்டில் நேற்றைய தினம் (02), கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

அந்நினைவுரையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, 

தமது சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர்களையும், அவர்களது இனவிடுதலைப் போரையும் பயன்படுத்த முனைந்தவர்கள் மத்தியில், எங்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்காக தென்னிந்தியத் திரையுலகின் போக்கையே எமக்குச் சாதகமானதாக மாற்ற முயன்று, அதில் வெற்றியும் கண்டவராக  விஜயகாந்த் திகழ்ந்தார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, தமிழின விடுதலைப்போரை ஆதரித்து அவர் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டம், விடுதலைப் போராட்டத்துக்கான நிதி சேகரிப்பு என்பவையும், ஊமைவிழிகள் உள்ளிட்ட திரைப்படங்களைக் கூட ஈழ ஆதரவுக்கான களங்களாக அவர் கையாண்டிருந்தமையும் தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அருஞ்செயல்கள். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெருநடிகருமான எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ஈழத்தமிழர்களுக்கும், அவர்களது போராட்டத்துக்கும் உளமார வலுச்சேர்த்த ஒருவராக விஜயகாந்த் எங்கள் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார். அத்தகைய அர்ப்பணங்கள் தந்த நெகிழ்வின்பால் அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள் - என்று மேலும் தெரிவித்தார்.


ஈழத்தேசிய விடுதலையை ஆழ நேசித்தவர் விஜயகாந்த் - சிறீதரன் எம்.பி.samugammedia தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள், ஈழத்தேசிய விடுதலையையும், தமிழின விடுதலைப் போராட்டத்தையும், தமிழினத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களையும் ஆழ நேசித்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின், கிளிநொச்சி நகர வட்டாரக் கிளையினரது ஏற்பாட்டில் நேற்றைய தினம் (02), கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அந்நினைவுரையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, தமது சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர்களையும், அவர்களது இனவிடுதலைப் போரையும் பயன்படுத்த முனைந்தவர்கள் மத்தியில், எங்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்காக தென்னிந்தியத் திரையுலகின் போக்கையே எமக்குச் சாதகமானதாக மாற்ற முயன்று, அதில் வெற்றியும் கண்டவராக  விஜயகாந்த் திகழ்ந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, தமிழின விடுதலைப்போரை ஆதரித்து அவர் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டம், விடுதலைப் போராட்டத்துக்கான நிதி சேகரிப்பு என்பவையும், ஊமைவிழிகள் உள்ளிட்ட திரைப்படங்களைக் கூட ஈழ ஆதரவுக்கான களங்களாக அவர் கையாண்டிருந்தமையும் தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அருஞ்செயல்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெருநடிகருமான எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ஈழத்தமிழர்களுக்கும், அவர்களது போராட்டத்துக்கும் உளமார வலுச்சேர்த்த ஒருவராக விஜயகாந்த் எங்கள் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார். அத்தகைய அர்ப்பணங்கள் தந்த நெகிழ்வின்பால் அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள் - என்று மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement