சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள்,பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெண்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு. சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவற்றுள்,பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பெண்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.