• Oct 04 2024

பெண்களுக்கு எதிரான வன்முறை - பிரதமர் அலுவலகம் முன் வெடித்த போராட்டம்

Chithra / Oct 3rd 2024, 3:20 pm
image

Advertisement

 

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என இன்றைய தினம் பெண்கள் அமைப்பினர் சிலர் பிரதமர் அலுவலகம் முன்பாக ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பு ப்லவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பெண்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பிரதமரிடம் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்

இங்கு உரையாற்றிய சமூக ஆர்வலர் சட்டத்தரணி திருமதி நிமல்கா பெர்னாண்டோ, 

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரதமரிடம் கடிதம் ஒன்றை கையளித்ததாக தெரிவித்தார். 

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


பெண்களுக்கு எதிரான வன்முறை - பிரதமர் அலுவலகம் முன் வெடித்த போராட்டம்  சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என இன்றைய தினம் பெண்கள் அமைப்பினர் சிலர் பிரதமர் அலுவலகம் முன்பாக ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கொழும்பு ப்லவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பெண்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பிரதமரிடம் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்இங்கு உரையாற்றிய சமூக ஆர்வலர் சட்டத்தரணி திருமதி நிமல்கா பெர்னாண்டோ, சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரதமரிடம் கடிதம் ஒன்றை கையளித்ததாக தெரிவித்தார். அண்மையில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement