நடப்பு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், 2023 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழிவாங்கியுள்ளது.
மேலும், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியுள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஐந்தாவது முறையாக நுழைந்துள்ளது.
இந்திய அணி இதுவரை இரண்டு முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.
2002ஆம் ஆண்டும், 2013ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
முதலில் பந்து வீசிய இந்தியா, அவுஸ்திரேலியாவை 264 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது, பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போது 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நான்கு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது.
விராட் கோலி 89 பந்துகளில் 84 ஓட்டங்களை குவித்திருந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயருடன் 91 ஓட்டங்களையும், நான்காவது விக்கெட்டுக்கு அக்சர் படேலுடன் 44 ஓட்டங்களையும், ஐந்தாவது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் 47 ஓட்டங்களையும் பகிர்ந்து கொண்ட விராட் கோலி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இது தவிர, ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடி 12,000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
மேலும், இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார்.
ஐசிசி போட்டிகளில் அதிக முறை அரைச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் தற்போது பெற்றுள்ளார்.
இதன்படி, 53 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 24 அரைச்சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். அதே நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் 58 இன்னிங்ஸ்களில் 23 முறை அரைச்சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி நடப்பு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம், 2023 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழிவாங்கியுள்ளது.மேலும், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியுள்ளது. ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஐந்தாவது முறையாக நுழைந்துள்ளது.இந்திய அணி இதுவரை இரண்டு முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது. 2002ஆம் ஆண்டும், 2013ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.முதலில் பந்து வீசிய இந்தியா, அவுஸ்திரேலியாவை 264 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது, பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போது 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நான்கு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது.விராட் கோலி 89 பந்துகளில் 84 ஓட்டங்களை குவித்திருந்தார்.மூன்றாவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயருடன் 91 ஓட்டங்களையும், நான்காவது விக்கெட்டுக்கு அக்சர் படேலுடன் 44 ஓட்டங்களையும், ஐந்தாவது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் 47 ஓட்டங்களையும் பகிர்ந்து கொண்ட விராட் கோலி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இந்தப் போட்டியில் விராட் கோலி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் புதிய வரலாறு படைத்துள்ளார்.ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இது தவிர, ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடி 12,000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.மேலும், இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார். ஐசிசி போட்டிகளில் அதிக முறை அரைச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் தற்போது பெற்றுள்ளார்.இதன்படி, 53 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 24 அரைச்சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். அதே நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் 58 இன்னிங்ஸ்களில் 23 முறை அரைச்சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.