• Dec 13 2024

யாழில் இடம்பெற்ற தொழில்சார் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும்...!

Sharmi / May 28th 2024, 5:54 pm
image

இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆய்வுக் கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26)  காலை 9 மணியளவில் யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இவ் ஆய்வரங்கில்  கணினி தொடர்பாக  ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் உரையாடல் இடம்பெற்றதுடன்,2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய கற்கை நெறிகள் தொடர்பான அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.

அதேவேளை தொழில்சார் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொழில்சார் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழில் இடம்பெற்ற தொழில்சார் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும். இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆய்வுக் கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26)  காலை 9 மணியளவில் யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.இவ் ஆய்வரங்கில்  கணினி தொடர்பாக  ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் உரையாடல் இடம்பெற்றதுடன்,2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய கற்கை நெறிகள் தொடர்பான அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.அதேவேளை தொழில்சார் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.தொழில்சார் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement