• Nov 17 2024

தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கை உலகெங்கும் ஒலிக்க தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பீர்- யாழ் வணிகர் கழகம் அழைப்பு..!

Sharmi / Aug 29th 2024, 9:30 am
image

தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிர்ணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பீர் என யாழ்ப்பாண வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது. 

தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. 

தமிழ் தலைமைகள் எமது உரிமையை நிலைநாட்டவும், சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இன்றுவரை சிங்களத்தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு உதாசீனப்பட்டுள்ளன. 

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமை,பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காலத்தை கடத்தி தட்டிக்கழித்து தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் ஐயா வரை ஏமாற்றியுள்ளார்கள். 

நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய தாயகம் நாம் தனித்துவமானவர்கள் எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்கு தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை எதிர்கொண்டு அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். 

இதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நாம் இன்னும் எமது உரிமைப்போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்த முடியும். 

இந்த ஜனாதிபதித்தேர்தலை தமிழ்மக்களின் விடிவுக்காக ஜனநாயக முறையில் புதிய அணுகுமுறையாக இதை அணுகி எமது உரிமைகளை வென்றெடுக்க புத்திசாதுரியமாக நடந்து இதனை அணுகுவதே சிறந்த தீர்மானமாக அமையும். 

இந்த முயற்சிக்கு வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்தேசியம் சார்ந்த அனைத்துக்கட்சிகளும், வடக்கு, கிழக்கில் செயற்படும் அத்தனை பொது அமைப்புக்களும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு தங்கள் பேராதரவை வழங்கி வாக்குகளை செலுத்த வேண்டும்.

அத்துடன் தென்னிலங்கை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கு  ஆதரவு வழங்கும் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகளும், தென்னிலங்கை தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பு வைத்துள்ளோர், மாற்றுக்கருத்துள்ளோர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி தமிழ் இனத்தின் விடிவிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக முறைப்படி நடைபெறும் உரிமைக்கான அங்கீகாரத்திற்கு தங்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம்.

தமிழ் பொது வேட்பாளரை நியமிக்காதுவிட்டால் தென்னிலங்கைத் தலைவர்கள் யோசிப்பார்கள் நாம் தமிழ் மக்களை எப்படி ஒதுக்கினாலும், புறக்கணித்தாலும், தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்தாலும் எமது கலாசாரம், பண்பாடுகளை சீரழித்தாலும், ஒடுக்குமுறைகளை பயன்படுத்தினாலும் தமிழர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். 

தமிழ் மக்கள் சார்பில் தமிழ் பொது வேட்பாளர் பின்வரும் செயற்பாடுகளை முன்னிறுத்தி போட்டியிடுவதே சிறந்தது என நாம் கருதுகின்றோம்.

1. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தம் பெரும்பான்மையை இழந்துள்ளனர். வடக்கு விரைவாகப் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. தமிழர்களினுடைய பூர்வீகமும் வரலாறும் பாடப்புத்தக ரீதியாகவும், தொல்பொருள் ரீதியிலும் தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்களை சூறையாடுவது, வடக்கு கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள், காணி அபகரிப்பு, கோயில்களை அழித்து புத்த பெருமானை பிரதிஸ்டை செய்வது, தமிழ் மக்களுக்கான வேலைவாய்ப்புக்களை புறக்கணிப்பது போன்றன தொடர்ந்தும் அன்றாட நிகழ்வாக நடைபெற்று வருகின்றது. 

அத்துடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், பாரபட்ச நடைமுறைகள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதற்கான   சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய கண்காணிப்பாளர்களை வடக்கு, கிழக்கில் நிறுத்தி தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் சகல அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்காணிப்புக்களை மேற்கொள்ள சர்வதேசத்தை கோருவது.

2. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி விசாரணை. 

3. வடமாகாணத்தில் போதியளவு வளங்கள் இருந்தும் அதனை பொருளாதார ரீதியில் முன்னெடுத்து அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைக்காமை.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பால் பற்றுக்கொண்ட எல்லோரும்   தமிழ் பொது வேட்பாளருக்கு எமது வாக்குகளை செலுத்தி வடக்குக் கிழக்கில் எமது பெரும்பான்மையை நிரூபித்து பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று இலங்கை, இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு எமது கோரிக்கைகளை இந்த தேர்தல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். 

தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரமுள்ள பூரண சுயாட்சியைப் பெறுவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பாக கருதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளருக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலானது ஜந்து வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது ஜனநாயக பண்பியல் முறையிலே எங்களுடைய உரிமைக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் சர்வதேசத்திற்கு அதனை முன்னிறுத்துவதற்கும் தமிழர் தரப்பில் இருக்கின்ற தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்ப்பொது வேட்பாளரான திரு.பா.அரியநேந்திரனை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் வெல்லவேண்டும் என்ற நோக்கமில்லாவிடினும், வடக்கு கிழக்கில் அதிகூடிய வாக்குகளை பெற்று தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி மற்றும் சுயநிர்ணயக்கோரிக்கையை நிலைநிறுத்தி உலகமெல்லாம் ஒலிக்க வாக்களிப்பீர்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கை உலகெங்கும் ஒலிக்க தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பீர்- யாழ் வணிகர் கழகம் அழைப்பு. தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிர்ணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பீர் என யாழ்ப்பாண வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது. தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. தமிழ் தலைமைகள் எமது உரிமையை நிலைநாட்டவும், சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இன்றுவரை சிங்களத்தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு உதாசீனப்பட்டுள்ளன. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமை,பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காலத்தை கடத்தி தட்டிக்கழித்து தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் ஐயா வரை ஏமாற்றியுள்ளார்கள். நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய தாயகம் நாம் தனித்துவமானவர்கள் எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்கு தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை எதிர்கொண்டு அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். இதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நாம் இன்னும் எமது உரிமைப்போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்த முடியும். இந்த ஜனாதிபதித்தேர்தலை தமிழ்மக்களின் விடிவுக்காக ஜனநாயக முறையில் புதிய அணுகுமுறையாக இதை அணுகி எமது உரிமைகளை வென்றெடுக்க புத்திசாதுரியமாக நடந்து இதனை அணுகுவதே சிறந்த தீர்மானமாக அமையும். இந்த முயற்சிக்கு வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்தேசியம் சார்ந்த அனைத்துக்கட்சிகளும், வடக்கு, கிழக்கில் செயற்படும் அத்தனை பொது அமைப்புக்களும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு தங்கள் பேராதரவை வழங்கி வாக்குகளை செலுத்த வேண்டும்.அத்துடன் தென்னிலங்கை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கு  ஆதரவு வழங்கும் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகளும், தென்னிலங்கை தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பு வைத்துள்ளோர், மாற்றுக்கருத்துள்ளோர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி தமிழ் இனத்தின் விடிவிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக முறைப்படி நடைபெறும் உரிமைக்கான அங்கீகாரத்திற்கு தங்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம்.தமிழ் பொது வேட்பாளரை நியமிக்காதுவிட்டால் தென்னிலங்கைத் தலைவர்கள் யோசிப்பார்கள் நாம் தமிழ் மக்களை எப்படி ஒதுக்கினாலும், புறக்கணித்தாலும், தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்தாலும் எமது கலாசாரம், பண்பாடுகளை சீரழித்தாலும், ஒடுக்குமுறைகளை பயன்படுத்தினாலும் தமிழர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் தமிழ் பொது வேட்பாளர் பின்வரும் செயற்பாடுகளை முன்னிறுத்தி போட்டியிடுவதே சிறந்தது என நாம் கருதுகின்றோம்.1. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தம் பெரும்பான்மையை இழந்துள்ளனர். வடக்கு விரைவாகப் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. தமிழர்களினுடைய பூர்வீகமும் வரலாறும் பாடப்புத்தக ரீதியாகவும், தொல்பொருள் ரீதியிலும் தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகின்றது. மேலும், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்களை சூறையாடுவது, வடக்கு கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள், காணி அபகரிப்பு, கோயில்களை அழித்து புத்த பெருமானை பிரதிஸ்டை செய்வது, தமிழ் மக்களுக்கான வேலைவாய்ப்புக்களை புறக்கணிப்பது போன்றன தொடர்ந்தும் அன்றாட நிகழ்வாக நடைபெற்று வருகின்றது. அத்துடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், பாரபட்ச நடைமுறைகள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதற்கான   சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய கண்காணிப்பாளர்களை வடக்கு, கிழக்கில் நிறுத்தி தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் சகல அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்காணிப்புக்களை மேற்கொள்ள சர்வதேசத்தை கோருவது.2. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி விசாரணை. 3. வடமாகாணத்தில் போதியளவு வளங்கள் இருந்தும் அதனை பொருளாதார ரீதியில் முன்னெடுத்து அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைக்காமை.மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பால் பற்றுக்கொண்ட எல்லோரும்   தமிழ் பொது வேட்பாளருக்கு எமது வாக்குகளை செலுத்தி வடக்குக் கிழக்கில் எமது பெரும்பான்மையை நிரூபித்து பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று இலங்கை, இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு எமது கோரிக்கைகளை இந்த தேர்தல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரமுள்ள பூரண சுயாட்சியைப் பெறுவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பாக கருதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளருக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.ஜனாதிபதித் தேர்தலானது ஜந்து வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது ஜனநாயக பண்பியல் முறையிலே எங்களுடைய உரிமைக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் சர்வதேசத்திற்கு அதனை முன்னிறுத்துவதற்கும் தமிழர் தரப்பில் இருக்கின்ற தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்ப்பொது வேட்பாளரான திரு.பா.அரியநேந்திரனை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.ஜனாதிபதித் தேர்தலில் வெல்லவேண்டும் என்ற நோக்கமில்லாவிடினும், வடக்கு கிழக்கில் அதிகூடிய வாக்குகளை பெற்று தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி மற்றும் சுயநிர்ணயக்கோரிக்கையை நிலைநிறுத்தி உலகமெல்லாம் ஒலிக்க வாக்களிப்பீர்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement