• Nov 22 2024

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமானது பொதுத் தேர்தல் வாக்களிப்பு

Chithra / Nov 14th 2024, 8:05 am
image

 

10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு   பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன.

அத்துடன் 8, 361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13, 421 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்துடன் 2024 வாக்காளர் பட்டியலுக்கு அமைய, சில மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 18 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேநேரம் களுத்துறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக குறைவடைந்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச்சீட்டுகள் மற்றும் சின்னம் போன்றவற்றைப் படமெடுத்து அல்லது காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களைக் கோரியுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமானது பொதுத் தேர்தல் வாக்களிப்பு  10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு   பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன.அத்துடன் 8, 361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13, 421 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று இடம்பெறவுள்ளது.இதற்கமைய, வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்படுவார்கள்.அத்துடன் 2024 வாக்காளர் பட்டியலுக்கு அமைய, சில மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது.இதற்கமைய, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 18 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.அதேநேரம் களுத்துறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக குறைவடைந்துள்ளது.இதேவேளை, இன்றைய தினம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச்சீட்டுகள் மற்றும் சின்னம் போன்றவற்றைப் படமெடுத்து அல்லது காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களைக் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement