• Sep 20 2024

சம்பூரில் அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்த மதில்கள்...! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்..!samugammedia

Sharmi / Jun 6th 2023, 8:45 pm
image

Advertisement

திருகோணமலை சம்பூர் பிரதேசத்திற்குள் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.

இதன்போது வீடொன்றின் மதிலை உடைத்துள்ளதோடு பாதுகாப்பு வேலிக்கும் சேதம் விளைவித்துள்ளது.

மேலும் மரவெள்ளி,நிலக்கடலை,வாழை,தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ள காட்டு யானை அறுவடை செய்து சம்பூர் மைதானத்தில் உலர வைக்கப்பட்டிருந்த நெல்லினை சாப்பிட்டும் சென்றுள்ளதாக சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக சம்பூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் பயிர்களை சேதப்படுத்துவதோடு வீடுகளில் அச்சத்துடனே இருப்பதாகவும் சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை ஊருக்குள் உட்புகாமல் இருக்கவும்,யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர வேண்டுமெனவும் சம்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


சம்பூரில் அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்த மதில்கள். அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்.samugammedia திருகோணமலை சம்பூர் பிரதேசத்திற்குள் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.இதன்போது வீடொன்றின் மதிலை உடைத்துள்ளதோடு பாதுகாப்பு வேலிக்கும் சேதம் விளைவித்துள்ளது.மேலும் மரவெள்ளி,நிலக்கடலை,வாழை,தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ள காட்டு யானை அறுவடை செய்து சம்பூர் மைதானத்தில் உலர வைக்கப்பட்டிருந்த நெல்லினை சாப்பிட்டும் சென்றுள்ளதாக சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியாக சம்பூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் பயிர்களை சேதப்படுத்துவதோடு வீடுகளில் அச்சத்துடனே இருப்பதாகவும் சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை ஊருக்குள் உட்புகாமல் இருக்கவும்,யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர வேண்டுமெனவும் சம்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement