கனடாவின் கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அலுவலகம் இது தொடர்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் இதுவரையில் இந்த ஆண்டில் 11 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரியப்படுகிறது.
கியூபெக் மாகாணத்தின் நொவெல், மொன்றியால் மற்றும் மொன்றிஜி போன்ற பகுதிகளில் அதிக அளவில் தட்டமை நோயாளர்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
நோய் பரவுகை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நோய்த் தொற்றிற்கு பலர் இலக்காகி இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே அறையில் நோய் தொற்று உள்ளவர்களுடன் இருப்பதன் மூலம் இந்த நோய் பரவக்கூடிய இது என தெரிவிக்கப்படுகிறது.
நோய் தொற்று பரவுகை தொடர்பில் கியூபெக் மாகாண இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நோய் தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகப்படுபவர்கள் தனித்திருப்பதன் மூலம் நோய் பரவுகையை வரையறுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சளி, இருமல். சிவந்த கண்கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் முக கவசம் அணிவது பொருத்தமானது எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை கனடாவின் கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அலுவலகம் இது தொடர்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் இதுவரையில் இந்த ஆண்டில் 11 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரியப்படுகிறது.கியூபெக் மாகாணத்தின் நொவெல், மொன்றியால் மற்றும் மொன்றிஜி போன்ற பகுதிகளில் அதிக அளவில் தட்டமை நோயாளர்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.நோய் பரவுகை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நோய்த் தொற்றிற்கு பலர் இலக்காகி இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.ஒரே அறையில் நோய் தொற்று உள்ளவர்களுடன் இருப்பதன் மூலம் இந்த நோய் பரவக்கூடிய இது என தெரிவிக்கப்படுகிறது.நோய் தொற்று பரவுகை தொடர்பில் கியூபெக் மாகாண இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.நோய் தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகப்படுபவர்கள் தனித்திருப்பதன் மூலம் நோய் பரவுகையை வரையறுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.சளி, இருமல். சிவந்த கண்கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் முக கவசம் அணிவது பொருத்தமானது எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.