• Nov 26 2024

இணையத்தில் விற்கப்படும் வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Chithra / Oct 13th 2024, 11:21 am
image

 

இணையத்தில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை என நுகர்வோர் விவகார ஆணையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத்தளத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார   தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற பொருட்களை இணையம் மூலம் பெறுவதில் பெண்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அத்தோடு கிரீம்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் விற்கப்படும் வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை  இணையத்தில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை என நுகர்வோர் விவகார ஆணையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.இணையத்தளத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார   தெரிவித்துள்ளார்.அத்தோடு, அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற பொருட்களை இணையம் மூலம் பெறுவதில் பெண்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அத்தோடு கிரீம்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement