• May 20 2024

இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை - பல வீடுகள் சேதம் samugammedia

Chithra / Nov 7th 2023, 12:08 pm
image

Advertisement

 


நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வான்பாயும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனே பிரதேசத்துக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செம்மஞ்சள் நிறத்திலான மண்சரிவுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மழை தொடரும் நிலையில் மண்மேடுகள், பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் அப்பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, வெயங்கொட வந்துரவ பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ராஜாங்கனை, அங்கமுவ, கலாஓயா, உடவலவை, தப்போவ மற்றும் முருதவெல ஆகிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தெதுருஓயா, இராஜாங்கனை, யான்ஓயா, வேஹெரகல உள்ளிட்ட 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வான்பாயும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை - பல வீடுகள் சேதம் samugammedia  நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வான்பாயும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து  வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதேவேளை, பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனே பிரதேசத்துக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செம்மஞ்சள் நிறத்திலான மண்சரிவுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசங்களில் மழை தொடரும் நிலையில் மண்மேடுகள், பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் அப்பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.இதேவேளை, வெயங்கொட வந்துரவ பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை ராஜாங்கனை, அங்கமுவ, கலாஓயா, உடவலவை, தப்போவ மற்றும் முருதவெல ஆகிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.தெதுருஓயா, இராஜாங்கனை, யான்ஓயா, வேஹெரகல உள்ளிட்ட 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வான்பாயும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement