• May 17 2024

பழங்களில் இரசாயனங்களை பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை..! samugammedia

Chithra / Nov 13th 2023, 3:56 pm
image

Advertisement

 பூநகரிச் சந்தைகளில் பழங்களைப் பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெளிவூட்டியிருந்தனர்.

பூநகரி பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொணாடிருந்தனர்.

இதன்போது பலசரக்கு கடைகளின் களஞ்சியப் பகுதி மற்றும் விற்பனைப் பகுதிகளில் மாசடையும் வகையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, வழக்குதாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் பழவிற்பனை நிலையங்கள் சோதனையிடப்பட்டபோது, அங்கு பழங்களைப் பழுக்கவைக்கப் பயன்படுத்தும் இரசாயனங்கள் தெளிகருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த பழ வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பழங்களில் இரசாயனங்களை பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை. samugammedia  பூநகரிச் சந்தைகளில் பழங்களைப் பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெளிவூட்டியிருந்தனர்.பூநகரி பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொணாடிருந்தனர்.இதன்போது பலசரக்கு கடைகளின் களஞ்சியப் பகுதி மற்றும் விற்பனைப் பகுதிகளில் மாசடையும் வகையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, வழக்குதாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.மேலும் பழவிற்பனை நிலையங்கள் சோதனையிடப்பட்டபோது, அங்கு பழங்களைப் பழுக்கவைக்கப் பயன்படுத்தும் இரசாயனங்கள் தெளிகருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த பழ வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement