• Sep 20 2024

சீரற்ற காலநிலையினால் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு!

Tamil nila / May 30th 2024, 10:58 pm
image

Advertisement

தொடரும் சீரற்ற நிலையினால் மகாவலி, களனி, களு, நில்வளா ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இதனால் குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

 அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டன. 

 விமலசுரேந்திர, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர், நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையினால் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு தொடரும் சீரற்ற நிலையினால் மகாவலி, களனி, களு, நில்வளா ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதனால் குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டன.  விமலசுரேந்திர, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர், நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement