நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆகியற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு - மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.samugammedia நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதேவேளை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆகியற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.