• Jan 22 2025

நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jan 20th 2025, 11:29 am
image


மழையுடனான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மல்வத்து ஓயாவை அண்டிய தந்திரிமலை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தெதுறு ஓயாவை அண்மித்த மொரகஸ்வெவ பகுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்வத்து கங்கையை அண்மித்த மனம்பிடிய மற்றும் யான் ஓயாவை அண்மித்த ஹொரவ்பொத்தான பகுதிகளிலும் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையினால், 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு - விடுக்கப்பட்ட எச்சரிக்கை மழையுடனான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மல்வத்து ஓயாவை அண்டிய தந்திரிமலை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தெதுறு ஓயாவை அண்மித்த மொரகஸ்வெவ பகுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மல்வத்து கங்கையை அண்மித்த மனம்பிடிய மற்றும் யான் ஓயாவை அண்மித்த ஹொரவ்பொத்தான பகுதிகளிலும் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையினால், 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement