மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி தடைப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று மாலை முதல் குழாய் நீர் விநியோகிக்கமானது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
மன்னார் நகர பகுதியில் உள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் இணைப்பை பெற்று தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அண்மை காலமாக குழாய் நீர் விநியோகம் தடை ஏற்படும் பச்சத்தில் முன் அறிவித்தல் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் (26) எவ்வித அறிவித்தலும் இன்றி நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும்,மன்னார் - சின்னக்கடை பிரதான வீதியில் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் கசிவை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோகத் தடை. மக்கள் பெரும் அசௌகரியம் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி தடைப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.குறித்த பகுதியில் நேற்று மாலை முதல் குழாய் நீர் விநியோகிக்கமானது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.மன்னார் நகர பகுதியில் உள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் இணைப்பை பெற்று தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.அண்மை காலமாக குழாய் நீர் விநியோகம் தடை ஏற்படும் பச்சத்தில் முன் அறிவித்தல் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் (26) எவ்வித அறிவித்தலும் இன்றி நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும்,மன்னார் - சின்னக்கடை பிரதான வீதியில் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் கசிவை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.