• Apr 30 2024

அரகலயவை அழிக்கவே ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம் – மொட்டுக் கட்சியின் முக்கிய எம்.பி கருத்து!

Sharmi / Jan 2nd 2023, 2:54 pm
image

Advertisement

‘அரகலய’ மக்கள் இயக்கத்தை அழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கருவியாக கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ ஹோம்’ தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய கும்பலை வழிநடத்தியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிஷாந்த இந்த நேர்காணலின் போது,

ரணில்  விக்கிரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான ‘அரகலய’க்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என தெரிவித்தார்.

“ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்” என சனத் நிஷாந்த தெரிவித்தார்.

மேலும் அவர் ரணில் விக்ரமசிங்கவை தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதத்துடன் ஒப்பிட்டார்.

“ஒரு நபர் ஒரு வெடிமருந்து அல்லது துப்பாக்கியை வைத்திருப்பது அதைக் கவனிப்பதற்காக அல்ல, அவசரகாலத்தில் அதைப் பயன்படுத்துவதற்காக. அதைத்தான் ரணில் விக்கிரமசிங்கவை வைத்தி செய்தோம். ‘அரகலய’ வை முடிவுக்கு கொண்டு வர அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்,” என்று அவர் விளக்கினார்.

அரகலயவை அழிக்கவே ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம் – மொட்டுக் கட்சியின் முக்கிய எம்.பி கருத்து ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை அழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கருவியாக கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ ஹோம்’ தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய கும்பலை வழிநடத்தியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிஷாந்த இந்த நேர்காணலின் போது,ரணில்  விக்கிரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான ‘அரகலய’க்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என தெரிவித்தார்.“ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்” என சனத் நிஷாந்த தெரிவித்தார்.மேலும் அவர் ரணில் விக்ரமசிங்கவை தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதத்துடன் ஒப்பிட்டார்.“ஒரு நபர் ஒரு வெடிமருந்து அல்லது துப்பாக்கியை வைத்திருப்பது அதைக் கவனிப்பதற்காக அல்ல, அவசரகாலத்தில் அதைப் பயன்படுத்துவதற்காக. அதைத்தான் ரணில் விக்கிரமசிங்கவை வைத்தி செய்தோம். ‘அரகலய’ வை முடிவுக்கு கொண்டு வர அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்,” என்று அவர் விளக்கினார்.

Advertisement

Advertisement

Advertisement