தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம் - இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு..!samugammedia
இலங்கை மக்களுக்கு நாங்கள் செய்த உதவிகள் சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதே போன்றே மீனவ சமூகம் முக்கியத்துவம் பெறுகின்றது என இலங்கைக்கான இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தின் முதல் விஜயமாக இந்த விஜயம் அமைந்துள்ளது. இங்கு என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ன தேவைகள் உள்ளது என்பதை அறிந்துள்ளேன்.
2010 இல் இருந்து இங்கு அமுல் படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களையும் என்னால் நினைவு கூற முடிகிறது.
இலங்கை மக்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவி செய்துள்ளோம். அவை சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதே போன்றே மீனவ சமூகமும் முக்கியத்துவம் பெறுகின்றது. மன்னாரிற்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருகை தருவதை பார்க்க கூடியதாக உள்ளது.குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகை தரும் மக்களினால் இங்கு அபிவிருத்தி மாத்திரமின்றி தொடர்புகள் ஊடாகவும் இங்கு ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை பார்க்க முடிகிறது.
அரச அதிபர் கூறியது போல் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்பு களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்கு தேவையான விடையங்கள் அங்கு முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக மீனவ சமூகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு,தொழில்நுட்ப மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு வர வேண்டியவை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம்.
சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில்நுட்பக் குழு ஒன்று வருகை தந்திருந்தனர். இங்கு இறால் மற்றும் நண்டு வளர்ப்பது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான உற்கட்டமைப்பு என்பவை தொடர்பாகவும் வேளைத்திட்டங்கள் இடம் பெற்று வருகிறது. அதே போன்று பல்வேறு வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய 4 மீனவ சமாசங்களுக்கு இந்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம் - இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு.samugammedia இலங்கை மக்களுக்கு நாங்கள் செய்த உதவிகள் சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதே போன்றே மீனவ சமூகம் முக்கியத்துவம் பெறுகின்றது என இலங்கைக்கான இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவித்தார்.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தின் முதல் விஜயமாக இந்த விஜயம் அமைந்துள்ளது. இங்கு என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ன தேவைகள் உள்ளது என்பதை அறிந்துள்ளேன்.2010 இல் இருந்து இங்கு அமுல் படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களையும் என்னால் நினைவு கூற முடிகிறது.இலங்கை மக்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவி செய்துள்ளோம். அவை சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதே போன்றே மீனவ சமூகமும் முக்கியத்துவம் பெறுகின்றது. மன்னாரிற்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருகை தருவதை பார்க்க கூடியதாக உள்ளது.குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகை தரும் மக்களினால் இங்கு அபிவிருத்தி மாத்திரமின்றி தொடர்புகள் ஊடாகவும் இங்கு ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை பார்க்க முடிகிறது.அரச அதிபர் கூறியது போல் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்பு களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்கு தேவையான விடையங்கள் அங்கு முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக மீனவ சமூகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு,தொழில்நுட்ப மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு வர வேண்டியவை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம்.சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில்நுட்பக் குழு ஒன்று வருகை தந்திருந்தனர். இங்கு இறால் மற்றும் நண்டு வளர்ப்பது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான உற்கட்டமைப்பு என்பவை தொடர்பாகவும் வேளைத்திட்டங்கள் இடம் பெற்று வருகிறது. அதே போன்று பல்வேறு வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய 4 மீனவ சமாசங்களுக்கு இந்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது