• Nov 23 2024

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்க நாம் தயாரில்லை- யாழில் நாமல் திட்டவட்டம்..!

Sharmi / Sep 13th 2024, 1:04 pm
image

பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ, வீரசிங்கம் மண்டபத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

இது ஒரு பௌத்த நாடு. ஆனாலும் எமது அரசாங்கம் அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கும். 

குறுகிய கால நன்மைகள்,சலுகைகள் அல்லது பதவிகளுக்காக சிறீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் செயல்படாது. 

மேலும், மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படாது.

எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்க நாம் தயாரில்லை- யாழில் நாமல் திட்டவட்டம். பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ, வீரசிங்கம் மண்டபத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.இது ஒரு பௌத்த நாடு. ஆனாலும் எமது அரசாங்கம் அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கும். குறுகிய கால நன்மைகள்,சலுகைகள் அல்லது பதவிகளுக்காக சிறீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் செயல்படாது. மேலும், மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படாது.எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement