• May 23 2025

யாழில் உரிய அனுமதியுடனேயே சேவையில் ஈடுபடுகின்றோம்; 764 வழித்தட பேருந்து சேவை சங்கம் அறிவிப்பு..!

Sharmi / May 22nd 2025, 4:58 pm
image

வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடனேயே பேருந்து சேவையில் ஈடுபடுகின்றோம் என்று  764 வழித்தட பேருந்து சேவை சங்கத்தின் தலைவர் , வட இலங்கை தனியார் பஸ்கம்பனிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில்  யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்,

நேற்று769 வழித்தடத்தில் போராட்டம் நடத்தியது  சம்பந்தமாக சில விடயங்களை வெளிப்படுத்தும் சூழ்நிலையில் நான் அமைந்திருக்கின்றேன். 

அதற்கமைய இதில் முக்கியமாக கடந்த 38 ஆண்டுகள் மேலாக யுத்தத்தின் காரணமாக பலாலி  பாதுகாப்பு வலயத்தினூடாக இடம்பெற்ற 764 வழித்தட பேருந்து சேவைகள் வசாவிளான் வரையில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

இந்தப் பாதை சித்திரை மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்டது. அந்தப் பாதை திறக்கப்பட்டதன் பின்பு பஸ்களுக்கான சேவையை கே.கே.எஸ் வரை நீடிக்குமாறு   உரிமையாளர்  மத்தியில் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது 769 வழித்தட சேவை மயிலிட்டி வரை இடம்பெற்றிருக்கின்றபோது இதை அதிகாரசபை மூலமும் ஆளுநர் சபை மூலமும் கலந்துரையாடி  தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று கூறி வடமாகாண போக்குவரத்து அதிகார சபைத் தலைவருக்கு இது தொடர்பாக தெரிவித்திருந்தோம்.

அவர்கள் ஆளுநரிடம்  கலந்துரையாடி  கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒரு  முடிவு வழங்குகின்றோம்  எனத் தெரிவித்தார்கள். இது தொடர்பில் 764 சங்கத்தின் தலைவருக்கு அறிவித்திருந்தோம். 

அவர்களும் அதிகாரசபையின் வேண்டுகோளுக்கிணங்க சேவையில் ஈடுபடாமல் வசாவிளான் சேவையில் மட்டும் ஈடுபட்டனர். மீண்டும் 20 ஆம் திகதி இது தொடர்பான முடிவு அதிகார சபையிடமிருந்து வராதவிடத்து ஆளுநரிடம் தொடர்பு கொண்ட பொழுது கடந்த மாதம்  23 ஆம்  திகதி கூட்டத்தை  நடத்துமாறு தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் 764 சங்கத்தின் பிரதிநிதிகளும்,  அதிகாரசபை உறுப்பினர்கள் , வடமாகாண போக்குவரத்து சேவை அதிகாரிகள் ஆகியோர்  கலந்துரையாடி  சேவையை நீடிப்பதற்காக 1 ஆம் திகதியிலிருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.  

இது தொடர்பாக 769 சங்கத்தினரால் ஆளுநருக்கு மேன்முறையீடு  ஒன்று அனுப்பப்பட்டதைத் தொடர்நது இது  தொடர்பில்  ஆளுநர் கடந்த ஏப்ரல் மாதம் 30   ஆம் திகதி மீண்டும் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தியிருந்தார். 

கூட்டத்தில்  764 தலைவரும் 769 தலைவரும் கலந்துகொண்டோம். அதன்போது 764 வழித்தடத்திற்குரிய பாதையை விட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.   இதற்கிடையே 769 சங்கம் தங்களை கீரிமலைக்கு சேவைக்கு விட கோரிக்கை விடுத்தனர்.

ஆளுநரின் முடிவிற்கிணங்க கடந்த மே மாதம் 2 ஆம் திகதி குறித்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தோம். ஆனால் 769 சங்கம் அதிலிருந்து எதற்கும் அசையவில்லை. இது தொடர்பில் 764 சங்கத் தலைவர் தமது சேவை வீணாகின்றது. 3500 ரூபாய் எரிபொருள் வீணாகின்றது எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  

அதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்  769 வழித்தடத்தினரை சேவையிலிருத்து விலகுமாறு ஆளுநரால் பணிக்கப்பட்டது.  இருந்தும் அவர்கள் நேற்றைய தினம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். என்றார். 

யாழில் உரிய அனுமதியுடனேயே சேவையில் ஈடுபடுகின்றோம்; 764 வழித்தட பேருந்து சேவை சங்கம் அறிவிப்பு. வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடனேயே பேருந்து சேவையில் ஈடுபடுகின்றோம் என்று  764 வழித்தட பேருந்து சேவை சங்கத்தின் தலைவர் , வட இலங்கை தனியார் பஸ்கம்பனிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில்  யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்,நேற்று769 வழித்தடத்தில் போராட்டம் நடத்தியது  சம்பந்தமாக சில விடயங்களை வெளிப்படுத்தும் சூழ்நிலையில் நான் அமைந்திருக்கின்றேன். அதற்கமைய இதில் முக்கியமாக கடந்த 38 ஆண்டுகள் மேலாக யுத்தத்தின் காரணமாக பலாலி  பாதுகாப்பு வலயத்தினூடாக இடம்பெற்ற 764 வழித்தட பேருந்து சேவைகள் வசாவிளான் வரையில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.இந்தப் பாதை சித்திரை மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்டது. அந்தப் பாதை திறக்கப்பட்டதன் பின்பு பஸ்களுக்கான சேவையை கே.கே.எஸ் வரை நீடிக்குமாறு   உரிமையாளர்  மத்தியில் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது 769 வழித்தட சேவை மயிலிட்டி வரை இடம்பெற்றிருக்கின்றபோது இதை அதிகாரசபை மூலமும் ஆளுநர் சபை மூலமும் கலந்துரையாடி  தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று கூறி வடமாகாண போக்குவரத்து அதிகார சபைத் தலைவருக்கு இது தொடர்பாக தெரிவித்திருந்தோம்.அவர்கள் ஆளுநரிடம்  கலந்துரையாடி  கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒரு  முடிவு வழங்குகின்றோம்  எனத் தெரிவித்தார்கள். இது தொடர்பில் 764 சங்கத்தின் தலைவருக்கு அறிவித்திருந்தோம். அவர்களும் அதிகாரசபையின் வேண்டுகோளுக்கிணங்க சேவையில் ஈடுபடாமல் வசாவிளான் சேவையில் மட்டும் ஈடுபட்டனர். மீண்டும் 20 ஆம் திகதி இது தொடர்பான முடிவு அதிகார சபையிடமிருந்து வராதவிடத்து ஆளுநரிடம் தொடர்பு கொண்ட பொழுது கடந்த மாதம்  23 ஆம்  திகதி கூட்டத்தை  நடத்துமாறு தெரிவித்திருந்தார்.குறித்த கூட்டத்தில் 764 சங்கத்தின் பிரதிநிதிகளும்,  அதிகாரசபை உறுப்பினர்கள் , வடமாகாண போக்குவரத்து சேவை அதிகாரிகள் ஆகியோர்  கலந்துரையாடி  சேவையை நீடிப்பதற்காக 1 ஆம் திகதியிலிருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.  இது தொடர்பாக 769 சங்கத்தினரால் ஆளுநருக்கு மேன்முறையீடு  ஒன்று அனுப்பப்பட்டதைத் தொடர்நது இது  தொடர்பில்  ஆளுநர் கடந்த ஏப்ரல் மாதம் 30   ஆம் திகதி மீண்டும் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தியிருந்தார். கூட்டத்தில்  764 தலைவரும் 769 தலைவரும் கலந்துகொண்டோம். அதன்போது 764 வழித்தடத்திற்குரிய பாதையை விட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.   இதற்கிடையே 769 சங்கம் தங்களை கீரிமலைக்கு சேவைக்கு விட கோரிக்கை விடுத்தனர்.ஆளுநரின் முடிவிற்கிணங்க கடந்த மே மாதம் 2 ஆம் திகதி குறித்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தோம். ஆனால் 769 சங்கம் அதிலிருந்து எதற்கும் அசையவில்லை. இது தொடர்பில் 764 சங்கத் தலைவர் தமது சேவை வீணாகின்றது. 3500 ரூபாய் எரிபொருள் வீணாகின்றது எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  அதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்  769 வழித்தடத்தினரை சேவையிலிருத்து விலகுமாறு ஆளுநரால் பணிக்கப்பட்டது.  இருந்தும் அவர்கள் நேற்றைய தினம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement