ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த அழைப்பு உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்தான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு பிரதான தேசியத் தேர்தல்களின் அடைவு மட்டத்தை கருத்திற்கொண்டு இந்தகலந்துரை யாடல்களை மேற்கொள்வது சிறந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமல்ல இதர அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்து கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம்.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.
எனவே இவ்விரு கட்சிகளிலும் உள்ளவர்கள் தங்களது தற்போதைய அரசியல் நிலைமை என்ன என்பது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும்.
எதேச்சதிகாரமாக செயற்படாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட நாம் தயார்- ஹர்ஷன ராஜகருணா உறுதி. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.இது தொடர்பில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த அழைப்பு உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்தான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு பிரதான தேசியத் தேர்தல்களின் அடைவு மட்டத்தை கருத்திற்கொண்டு இந்தகலந்துரை யாடல்களை மேற்கொள்வது சிறந்தது.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமல்ல இதர அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்து கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம்.குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.எனவே இவ்விரு கட்சிகளிலும் உள்ளவர்கள் தங்களது தற்போதைய அரசியல் நிலைமை என்ன என்பது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும். எதேச்சதிகாரமாக செயற்படாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம் எனவும் தெரிவித்தார்.