• Sep 21 2024

இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும்: நாணய நிதியம் நம்பிக்கை ! samugammedia

Tamil nila / May 5th 2023, 10:10 pm
image

Advertisement

பொருளாதாரம் மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைந்தால், இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எனவே, நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்காமல் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் சவாலை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டமானது, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

பணவீக்கம் என்பது ஏழைகள் மீதான வரியாகும்.

இந்தநிலையில் இலங்கையில் பணவீக்கம் குறைந்துள்ளது என்று கிருஷ்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பணவீக்கம் நிரந்தரமாகக் குறைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும்: நாணய நிதியம் நம்பிக்கை samugammedia பொருளாதாரம் மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைந்தால், இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.எனவே, நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்காமல் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் சவாலை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டமானது, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.பணவீக்கம் என்பது ஏழைகள் மீதான வரியாகும்.இந்தநிலையில் இலங்கையில் பணவீக்கம் குறைந்துள்ளது என்று கிருஷ்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், பணவீக்கம் நிரந்தரமாகக் குறைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement