• Sep 21 2024

வடக்கில் அபிவிருத்திஎன்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுவதை கண்டிக்கிறோம் - ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் காட்டம்...!samugammedia

Anaath / Dec 16th 2023, 8:31 pm
image

Advertisement

வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை அபகரிப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ், அதி உயர் வலயங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்களை கண்டுபிடித்துப் பிணக்குகளை தீருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

2024ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகத்தின் முக்கிய தூணாக இருப்பது தேர்தல். ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதற்கு பின்னர் கால வரையறையின்றி அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

9 மாகாண சபைகளும் கலைந்து காலங்கள் கடந்திருக்கின்றன. இலங்கையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உத்தேசம்  அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. எனவே 2024ம் ஆண்டு ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலா? அல்லது  உள்ளூராட்சி சபை,  மாகாண சபை தேர்தலா? என்ற குழப்பத்தின் மத்தியில் தேர்தலை தாண்டி அரச பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாகவும் பேசப்படுகிறது. 

எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி சபை தேர்தல், மாகாண சபை தேர்தல் மக்களுடைய ஜனநாயக உரிமையை நிலை நிறுத்தி நடத்தப்பட வேண்டும். 

2024 தேர்தல் நடைபெறும் போது அது எதுவாக இருந்தாலும் நாங்கள் முக்கியமான 2 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். 

பெண்களுக்கு 25வீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் அனைத்து வேட்பாளர்களும் சமதளத்தில் நின்று போராடுகின்ற சூழல், தேர்தல் பிரச்சாரம் தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் அல்லாமல் மக்கள் நலனை சிந்திக்கின்ற அரசியல்வாதிகளை உருவாக்குகின்ற தேர்தல் பிரச்சார நிதி சட்டம் இருக்க வேண்டும். 

வடபகுதி நிலங்கள் தொடர்பாக நாங்கள் அக்கறை கொள்ள வேண்டும்.  அரசாங்கத்தின் கையிலே ஏராளமான காணிகள் அதி உயர் வலயங்களாக உள்ளன. இராணுவத்தின் வசம், பொலிசாரின் வசம் காணிகள் உள்ளன. ஆனால் வடக்கில் அபிவிருத்தி பணிகள் காணி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பது எமக்கு மகிழ்ச்சியே. ஆனால் காணி உரிமையாளர்களை அடையாளம் காணுங்கள். ஏனென்றால் காணி உறுதி இல்லாமல் போயிருக்கிறது. காணி உறுதி இருந்தும் அடையாளப்படுத்த முடியாமல் போயுள்ளார்கள். காணிகளுக்கு செல்ல முடியாமல் அவை அதி உயர் வலயமாக உள்ளது. எனவே அம்மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அக்காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்து வையுங்கள். ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை அபகரிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

வடக்கில் அபிவிருத்திஎன்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுவதை கண்டிக்கிறோம் - ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் காட்டம்.samugammedia வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை அபகரிப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ், அதி உயர் வலயங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்களை கண்டுபிடித்துப் பிணக்குகளை தீருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2024ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகத்தின் முக்கிய தூணாக இருப்பது தேர்தல். ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதற்கு பின்னர் கால வரையறையின்றி அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 9 மாகாண சபைகளும் கலைந்து காலங்கள் கடந்திருக்கின்றன. இலங்கையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உத்தேசம்  அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. எனவே 2024ம் ஆண்டு ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலா அல்லது  உள்ளூராட்சி சபை,  மாகாண சபை தேர்தலா என்ற குழப்பத்தின் மத்தியில் தேர்தலை தாண்டி அரச பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாகவும் பேசப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி சபை தேர்தல், மாகாண சபை தேர்தல் மக்களுடைய ஜனநாயக உரிமையை நிலை நிறுத்தி நடத்தப்பட வேண்டும். 2024 தேர்தல் நடைபெறும் போது அது எதுவாக இருந்தாலும் நாங்கள் முக்கியமான 2 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். பெண்களுக்கு 25வீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் அனைத்து வேட்பாளர்களும் சமதளத்தில் நின்று போராடுகின்ற சூழல், தேர்தல் பிரச்சாரம் தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் அல்லாமல் மக்கள் நலனை சிந்திக்கின்ற அரசியல்வாதிகளை உருவாக்குகின்ற தேர்தல் பிரச்சார நிதி சட்டம் இருக்க வேண்டும். வடபகுதி நிலங்கள் தொடர்பாக நாங்கள் அக்கறை கொள்ள வேண்டும்.  அரசாங்கத்தின் கையிலே ஏராளமான காணிகள் அதி உயர் வலயங்களாக உள்ளன. இராணுவத்தின் வசம், பொலிசாரின் வசம் காணிகள் உள்ளன. ஆனால் வடக்கில் அபிவிருத்தி பணிகள் காணி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பது எமக்கு மகிழ்ச்சியே. ஆனால் காணி உரிமையாளர்களை அடையாளம் காணுங்கள். ஏனென்றால் காணி உறுதி இல்லாமல் போயிருக்கிறது. காணி உறுதி இருந்தும் அடையாளப்படுத்த முடியாமல் போயுள்ளார்கள். காணிகளுக்கு செல்ல முடியாமல் அவை அதி உயர் வலயமாக உள்ளது. எனவே அம்மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அக்காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்து வையுங்கள். ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை அபகரிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement