புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்றுகூடி விளக்குமாறு ஏந்தி நுதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று ஒன்று கூடிய பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என விளக்குமாற்றுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ்வாறு பொது மக்கள் விளக்குமாறுகளை ஏற்தி பல்வேறு பதாதைகளுடன் கோஷங்களை எழுப்பியதுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்டபோது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள்.
ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.
எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜிடம் மகஜர் ஒன்றினை வழங்கினர். பின்னர் போராட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மதுபானசாலை எமக்கு வேண்டாம் - விளக்குமாறுடன் வீதிக்கிறங்கிய அம்பாறை மக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்றுகூடி விளக்குமாறு ஏந்தி நுதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று ஒன்று கூடிய பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என விளக்குமாற்றுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.இவ்வாறு பொது மக்கள் விளக்குமாறுகளை ஏற்தி பல்வேறு பதாதைகளுடன் கோஷங்களை எழுப்பியதுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்டபோது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள்.ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜிடம் மகஜர் ஒன்றினை வழங்கினர். பின்னர் போராட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.