• Apr 26 2024

'கரடியை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை'! விநோத வேலைவாய்ப்பை வெளியிட்ட அரசு SamugamMedia

Chithra / Mar 19th 2023, 6:58 pm
image

Advertisement

'கரடியை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை' அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூ மெக்ஸிகோ விளையாட்டு மற்றும் மீன் துறை கரடிகளைப் பாதுகாக்கும் ஏஜென்ஸி தனது  பேஸ்புக் பக்கத்தில் “கரடிகளை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை” என்ற பதிவு தான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த வேலையில் பணியாற்ற விரும்புபவர்களின் தகுதிகள் குறித்தும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“கடினமான சூழ்நிலையில் நடைபயணம் செய்யும் திறன் இருக்க வேண்டும், கரடி குகைக்குள் ஊர்ந்து செல்லும் தைரியம் இருக்க வேண்டும், மேலும் செயல்பாட்டின் போது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உங்கள் சக பணியாளர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.” என பட்டியல் நீள்கிறது.

“எல்லா சட்ட அமலாக்க களப்பணிகளும் கவர்ச்சிகரமானவை அல்ல. ஆனால் வாழ்நாள் அனுபவத்தைப் பெற நீங்கள் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புகிறோம்” என அந்த பதிவு குறிப்பிடுகிறது.


மேலும் அதில் அடுத்த வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கான வகுப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன எனவும், மார்ச் 30ஆம் திகதிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கரடியைக் கட்டிப்பிடிக்கும் புகைப்படங்களும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.

நியூமெக்ஸிகோவில் அதிக அளவில் கருப்பு கரடிகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

'கரடியை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை' விநோத வேலைவாய்ப்பை வெளியிட்ட அரசு SamugamMedia 'கரடியை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை' அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.நியூ மெக்ஸிகோ விளையாட்டு மற்றும் மீன் துறை கரடிகளைப் பாதுகாக்கும் ஏஜென்ஸி தனது  பேஸ்புக் பக்கத்தில் “கரடிகளை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை” என்ற பதிவு தான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.இந்த வேலையில் பணியாற்ற விரும்புபவர்களின் தகுதிகள் குறித்தும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.“கடினமான சூழ்நிலையில் நடைபயணம் செய்யும் திறன் இருக்க வேண்டும், கரடி குகைக்குள் ஊர்ந்து செல்லும் தைரியம் இருக்க வேண்டும், மேலும் செயல்பாட்டின் போது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உங்கள் சக பணியாளர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.” என பட்டியல் நீள்கிறது.“எல்லா சட்ட அமலாக்க களப்பணிகளும் கவர்ச்சிகரமானவை அல்ல. ஆனால் வாழ்நாள் அனுபவத்தைப் பெற நீங்கள் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புகிறோம்” என அந்த பதிவு குறிப்பிடுகிறது.மேலும் அதில் அடுத்த வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கான வகுப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன எனவும், மார்ச் 30ஆம் திகதிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.கரடியைக் கட்டிப்பிடிக்கும் புகைப்படங்களும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.நியூமெக்ஸிகோவில் அதிக அளவில் கருப்பு கரடிகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement