• Nov 26 2024

“யாழை அழியாது பாதுகாக்க வேண்டும்” யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்துக்கு யாழ் வழங்கிவைத்த இசைக்கலைஞர்

Chithra / Jul 19th 2024, 10:32 pm
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலை பீடத்துக்கு நோர்வேயில் இருந்து வருகை தந்த இசைக்கலைஞர் கலாரஜி கந்தமூர்த்தி  யாழ் ஒன்றை அன்பளிப்பாக இன்று வழங்கியுள்ளார்.

யாழை மாணவர்களுக்கு வழங்கிவைத்ததுடன் அதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் தெரியப்படுத்தியிருந்தார். 

இது குறித்து அவர் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாணவர்கள் இசைக்கருவியான யாழைப் படிக்க வேண்டும். இதைப்பற்றி  யாழ்ப்பாணத்து மக்கள் அறிய வேண்டும் என்பதே எனது விருப்பமும் நோக்கமும் ஆகும். 

அதனடிப்படையில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்துக்கு சென்று யாழ் ஒன்றை கையளித்துள்ளேன். 

அங்கு 12 மாணவர்கள் யாழைப் படிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

  

யாழ்ப்பாணத்திலே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் யாழ்  வாசிக்கப்பட வேண்டும். இது அழிந்து விடக் கூடாது என்பதே எனது நோக்கம்

யாழ் என்றால் என்ன? யாழ்  எப்படி வந்தது என்ற வரலாற்றை எமது மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.

ஆகவே அனைவரும் யாழின் பெருமைகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும்  காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

“யாழை அழியாது பாதுகாக்க வேண்டும்” யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்துக்கு யாழ் வழங்கிவைத்த இசைக்கலைஞர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலை பீடத்துக்கு நோர்வேயில் இருந்து வருகை தந்த இசைக்கலைஞர் கலாரஜி கந்தமூர்த்தி  யாழ் ஒன்றை அன்பளிப்பாக இன்று வழங்கியுள்ளார்.யாழை மாணவர்களுக்கு வழங்கிவைத்ததுடன் அதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் தெரியப்படுத்தியிருந்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாணவர்கள் இசைக்கருவியான யாழைப் படிக்க வேண்டும். இதைப்பற்றி  யாழ்ப்பாணத்து மக்கள் அறிய வேண்டும் என்பதே எனது விருப்பமும் நோக்கமும் ஆகும். அதனடிப்படையில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்துக்கு சென்று யாழ் ஒன்றை கையளித்துள்ளேன். அங்கு 12 மாணவர்கள் யாழைப் படிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.  யாழ்ப்பாணத்திலே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் யாழ்  வாசிக்கப்பட வேண்டும். இது அழிந்து விடக் கூடாது என்பதே எனது நோக்கம்யாழ் என்றால் என்ன யாழ்  எப்படி வந்தது என்ற வரலாற்றை எமது மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.ஆகவே அனைவரும் யாழின் பெருமைகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும்  காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement