• May 13 2024

வடக்கு கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது...! செல்வம் எம்.பி. கடும் எதிர்ப்பு..! samugammedia

Chithra / Nov 10th 2023, 11:09 am
image

Advertisement

 

வடக்கிலோ கிழக்கிலோ சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது, அதை நாங்கள் எதிர்போம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

மன்னார் ரொலோ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இலங்கையில் அபிவிருத்தி  என்ற போர்வையில் சீனாவினால்  வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.

அதேபோலத்தான்  சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக  போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது, 

அதே நேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது, 

அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது. அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாது நிலையில் இருக்கிறோம். 

இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை  தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது. 

எப்படி என்று சொன்னால் இங்கே  தன்னுடைய லாபம் கருதி என்னென்ன விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது.

சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதே நேரம்  மீனவர்களுக்கும் மீன் வலைகளை வழங்குகின்றார். 

ஆகவே சீனா நினைப்பது என்னவென்றால் மீனவர்களை தன்னகத்தே கொண்டுவந்தால் வடக்கில்  உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி  அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.

எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற  நிலை ஏற்படும்.

அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்


வடக்கு கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. செல்வம் எம்.பி. கடும் எதிர்ப்பு. samugammedia  வடக்கிலோ கிழக்கிலோ சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது, அதை நாங்கள் எதிர்போம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்மன்னார் ரொலோ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்இலங்கையில் அபிவிருத்தி  என்ற போர்வையில் சீனாவினால்  வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.அதேபோலத்தான்  சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக  போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது, அதே நேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது. அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாது நிலையில் இருக்கிறோம். இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை  தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது. எப்படி என்று சொன்னால் இங்கே  தன்னுடைய லாபம் கருதி என்னென்ன விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது.சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதே நேரம்  மீனவர்களுக்கும் மீன் வலைகளை வழங்குகின்றார். ஆகவே சீனா நினைப்பது என்னவென்றால் மீனவர்களை தன்னகத்தே கொண்டுவந்தால் வடக்கில்  உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி  அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற  நிலை ஏற்படும்.அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement