• Apr 28 2024

வீரர்கள் மத்தியில் எந்தவித பிரச்சினையும் இல்லை..! மஹிந்த கருத்து samugammedia

Chithra / Nov 10th 2023, 11:03 am
image

Advertisement

 

கிரிக்கெட்  அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் எழுச்சி பெறும் என நான் நம்புகின்றேன். 

சரியான அடித்தளம் மற்றும் ஒற்றுமை என்ற தற்காலிக பிரச்சினை இருப்பதால் இலங்கை கிரிக்கெட் சரிவில் இருக்கின்றத.

இந்த ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமாக விளையாடியிருந்தாலும் கடந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை வென்றது. 

அத்தோடு இந்த ஆண்டு இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் கிடையாது பிரச்சினை இருக்கும் இடங்களை கண்டுகொண்டு அதனை சரிசெய்ய வேண்டும்.

நிச்சயமாக, அதற்கு சிறிது நேரம் எடுக்கும், எவ்வாறாயினும், எமது வீரர்களை இழிவாகப் பார்க்காமல், போட்டிகளின் முடிவைப் பொருட்படுத்தாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கு மரண அடி என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை 

ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்தவும் முடியாது, தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும். என்றார்.

வீரர்கள் மத்தியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. மஹிந்த கருத்து samugammedia  கிரிக்கெட்  அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் எழுச்சி பெறும் என நான் நம்புகின்றேன். சரியான அடித்தளம் மற்றும் ஒற்றுமை என்ற தற்காலிக பிரச்சினை இருப்பதால் இலங்கை கிரிக்கெட் சரிவில் இருக்கின்றத.இந்த ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமாக விளையாடியிருந்தாலும் கடந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை வென்றது. அத்தோடு இந்த ஆண்டு இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் கிடையாது பிரச்சினை இருக்கும் இடங்களை கண்டுகொண்டு அதனை சரிசெய்ய வேண்டும்.நிச்சயமாக, அதற்கு சிறிது நேரம் எடுக்கும், எவ்வாறாயினும், எமது வீரர்களை இழிவாகப் பார்க்காமல், போட்டிகளின் முடிவைப் பொருட்படுத்தாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கு மரண அடி என்று அவர் கூறியுள்ளார்.அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்தவும் முடியாது, தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement