• Apr 30 2024

அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்..! சாணக்கியன் வலியுறுத்து samugammedia

Chithra / Nov 10th 2023, 10:58 am
image

Advertisement

 

அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இரா.சாணக்கியன், 

குறித்த சந்திப்பில் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாக இருந்தது.

மற்றும் எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் (federal) கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும் மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது.

அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என பலர் வாழ்ந்து வருகின்றார்கள்.

அதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும். சாணக்கியன் வலியுறுத்து samugammedia  அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இரா.சாணக்கியன், குறித்த சந்திப்பில் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாக இருந்தது.மற்றும் எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் (federal) கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும் மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது.அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என பலர் வாழ்ந்து வருகின்றார்கள்.அதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement