• Nov 26 2024

முறையான நீதி விசாரணையே எமக்கு வேண்டும்...! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டு.நகரில் போராட்டம்...!

Sharmi / Jun 24th 2024, 2:41 pm
image

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டம் இன்று(24) காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?, பிள்ளைகளை தினம் தேடிக் கொண்டே நீதி இன்றியே இறந்து கொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



முறையான நீதி விசாரணையே எமக்கு வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டு.நகரில் போராட்டம். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டம் இன்று(24) காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா, பிள்ளைகளை தினம் தேடிக் கொண்டே நீதி இன்றியே இறந்து கொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement