• Apr 26 2024

அட்டைப் பண்ணையை எதிர்த்ததால் தூக்கி எறியப்பட்டோம் - பின்னணியில் கட்சி உள்ளது..! புதிய சர்ச்சை.!

Sharmi / Feb 1st 2023, 9:58 am
image

Advertisement

யாழ் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஜனநாயக முறைக்கு மாறாக அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தத்திற்கு அடிபணிந்து  கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்துள்ளதாக முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

9 பேர் கொண்ட நபர்களை உள்ளடக்கி பழைய நிர்வகத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் கட்சி ஒன்று செயற்படுவதாகவும் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கடல் அட்டைப்பண்ணை அமைப்பது தொடர்பாக தமது நியாயமான எதிர்ப்பினை வெளியிட்டதன் காரணமாக தமது அனுமதி இன்றி புதிய நிர்வாகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் உப தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர் அட்டைப்பண்ணைக்கு ஆதரவானவர்கள் என்றும் இந்த புதிய தெரிவு ஜனநாயக முறைப்படி இடம்பெறவில்லை என்றும் தமது எதிர்ப்பினை கண்டு கட்சி ஒன்று அஞ்சி இதனை முன்னெடுத்துள்ளதாக நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அட்டைப் பண்ணையை எதிர்த்ததால் தூக்கி எறியப்பட்டோம் - பின்னணியில் கட்சி உள்ளது. புதிய சர்ச்சை. யாழ் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஜனநாயக முறைக்கு மாறாக அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தத்திற்கு அடிபணிந்து  கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்துள்ளதாக முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்று இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.9 பேர் கொண்ட நபர்களை உள்ளடக்கி பழைய நிர்வகத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் கட்சி ஒன்று செயற்படுவதாகவும் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.அண்மைக்காலமாக கடல் அட்டைப்பண்ணை அமைப்பது தொடர்பாக தமது நியாயமான எதிர்ப்பினை வெளியிட்டதன் காரணமாக தமது அனுமதி இன்றி புதிய நிர்வாகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் உப தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர் அட்டைப்பண்ணைக்கு ஆதரவானவர்கள் என்றும் இந்த புதிய தெரிவு ஜனநாயக முறைப்படி இடம்பெறவில்லை என்றும் தமது எதிர்ப்பினை கண்டு கட்சி ஒன்று அஞ்சி இதனை முன்னெடுத்துள்ளதாக நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement