ஐக்கிய மக்கள் சக்தி கடந்த முறை போன்று இம் முறையும் இரு ஆசனங்களை திருகோணமலை மாவட்டத்தில் பெறும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கிண்ணியா பைசல் நகர் பகுதியில் நேற்றையதினம்(30) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
1948ல் இருந்து எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இம் முறையும் கடந்த முறை போன்று இரு ஆசனங்களை பெற வேண்டும்.
43 வீதமான முஸ்லிம்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளார்கள்.
பொய்யான வதந்திகளை நம்பி மக்கள் ஏமாறாமல் இம் முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
கிண்ணியாவில் பல கட்சி பல சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்க செயற்படும் விதமாக செயற்படுகிறார்கள்.
எனவே, கடந்த முறை எவ்வாறு வாக்களித்து இரு பிரதிநிதிகளை பெற்றோமோ அதே போன்று இம் முறையும் அந்த ஆசனங்களை நாம் தக்க வைத்து கொள்ள மக்கள் சிந்தித்து டெலிபோன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
திருமலை மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவோம்- எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை. ஐக்கிய மக்கள் சக்தி கடந்த முறை போன்று இம் முறையும் இரு ஆசனங்களை திருகோணமலை மாவட்டத்தில் பெறும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.கிண்ணியா பைசல் நகர் பகுதியில் நேற்றையதினம்(30) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.1948ல் இருந்து எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இம் முறையும் கடந்த முறை போன்று இரு ஆசனங்களை பெற வேண்டும். 43 வீதமான முஸ்லிம்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளார்கள். பொய்யான வதந்திகளை நம்பி மக்கள் ஏமாறாமல் இம் முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.கிண்ணியாவில் பல கட்சி பல சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்க செயற்படும் விதமாக செயற்படுகிறார்கள். எனவே, கடந்த முறை எவ்வாறு வாக்களித்து இரு பிரதிநிதிகளை பெற்றோமோ அதே போன்று இம் முறையும் அந்த ஆசனங்களை நாம் தக்க வைத்து கொள்ள மக்கள் சிந்தித்து டெலிபோன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.