• May 03 2024

ரணிலின் ஆட்சியில் மக்கள் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கமாட்டோம்...! வஜிர திட்டவட்டம்...!

Sharmi / Apr 22nd 2024, 1:40 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கும் வரை எவருக்கும் பட்டினி கிடக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி சமனல விளையாட்டரங்கில் நேற்றையதினம்(21) இடம்பெற்ற, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் உள்ள மக்களில் ஒருவர் கூட பட்டினி கிடக்க அனுமதிக்கப்பட மாட்டோம்.

இலங்கையின் ஆட்சிக்கு பங்களித்த அனைவரும் வாங்கிய கடனை செலுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நிறைவேற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, காலியில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.



ரணிலின் ஆட்சியில் மக்கள் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கமாட்டோம். வஜிர திட்டவட்டம். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கும் வரை எவருக்கும் பட்டினி கிடக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.காலி சமனல விளையாட்டரங்கில் நேற்றையதினம்(21) இடம்பெற்ற, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் உள்ள மக்களில் ஒருவர் கூட பட்டினி கிடக்க அனுமதிக்கப்பட மாட்டோம்.இலங்கையின் ஆட்சிக்கு பங்களித்த அனைவரும் வாங்கிய கடனை செலுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நிறைவேற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.இதேவேளை, காலியில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement