• May 04 2024

பணம் பெற்றதால் குழப்பம் - ஐக்கிய மக்கள் சக்தியில் எழுந்துள்ள சர்ச்சை

Chithra / Apr 22nd 2024, 1:41 pm
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவித்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான  நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்க்கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது குறித்து கட்சியின் அனுமதியை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் பணியாற்றுவதற்காக அரசாங்கம் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை, மாறாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.

பணம் பெற்றதால் குழப்பம் - ஐக்கிய மக்கள் சக்தியில் எழுந்துள்ள சர்ச்சை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவித்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான  நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்க்கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது குறித்து கட்சியின் அனுமதியை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.கடந்த காலங்களில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் பணியாற்றுவதற்காக அரசாங்கம் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை, மாறாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement