இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடையை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அதேவேளை அரசாங்கம் இவ்விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம்.
தேர்தலுக்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புத்தாண்டின் பின்னர் தீவிரமாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
சுமார் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் இவ்விவகாரத்தில் நியாயம் வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழு சிறு சிறு காரணிகளுக்காக வேட்புமனுக்களை நிராகரிப்பதை விட, தமக்கு தேவையற்றவர்களை நிராகரிக்கும் பொறுப்பினை மக்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி ரீதியில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம் - எதிர்க்கட்சி திட்டவட்டம் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடையை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அதேவேளை அரசாங்கம் இவ்விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம்.தேர்தலுக்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புத்தாண்டின் பின்னர் தீவிரமாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சுமார் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் இவ்விவகாரத்தில் நியாயம் வழங்க வேண்டும்.தேர்தல் ஆணைக்குழு சிறு சிறு காரணிகளுக்காக வேட்புமனுக்களை நிராகரிப்பதை விட, தமக்கு தேவையற்றவர்களை நிராகரிக்கும் பொறுப்பினை மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி ரீதியில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.