• May 03 2025

வெலிக்கடை இளைஞன் விவகாரம்; சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Chithra / Apr 18th 2025, 3:07 pm
image

 

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நிமேஷ் சத்சர என்ற இளைஞரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக 23ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 23 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக உடலைத் தோண்டி எடுக்கக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அனுமதி கோரியதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உடலைத் தோண்டி எடுக்கும் போது, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பதுளை நீதவானிடம் தெரிவித்தார்.

அத்துடன் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள 3 பேர் கொண்ட வைத்திய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

வெலிக்கடை இளைஞன் விவகாரம்; சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு  வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நிமேஷ் சத்சர என்ற இளைஞரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக 23ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்மாதம் 23 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக உடலைத் தோண்டி எடுக்கக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அனுமதி கோரியதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.உடலைத் தோண்டி எடுக்கும் போது, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பதுளை நீதவானிடம் தெரிவித்தார்.அத்துடன் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள 3 பேர் கொண்ட வைத்திய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now