• Oct 06 2024

ஆனந்த சங்கரி செய்தததையே இன்று கூட்டமைப்புக்குள் இருப்போர் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி ஆதங்கம்!

Sharmi / Jan 13th 2023, 9:40 am
image

Advertisement

2004ஆம்ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா எப்படி தூக்கிச்சென்றாறோ அதேவேலையை இன்று 18வருடங்களுக்கு பின்னர் வீட்டுச்சின்னத்தையும் கட்சியையும் ஒரே கட்சியிலிருந்தவர்கள் தூக்கிச்சென்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பேரினவாதத்துடனேயே இணைந்து செயற்படும் என்பதனால் அவர்களுடன் எந்த கூட்டும் சேரமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம்,தமிழீழ விடுதலை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கந்தராஜா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நாடு பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலிருக்கும்போது ஒரு தேர்தலை நாங்கள் சந்திக்கவிருக்கின்றோம். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதித்திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு தரப்பு தேர்தலை நடத்தக்கூடாது என்றும் இன்னுமொரு தரப்பு தேர்தலை நடத்த வேண்டுமென்றும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் அரசியற் கட்சியாக தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு தேவைப்பாட்டுடன் இருக்கின்றோம்.

வடகிழக்கிற்கு வெளியே உள்ள அரசியற் கட்சிகள் கடந்த கால அரசியல் சூழ்நிலையை ஒட்டி தங்களது பலத்தை பரீட்சித்துப்பார்க்கும் ஒரு தேர்தலாக இந்தத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.
குறிப்பாக மொட்டுக் கட்சியின் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக்கப்பட்டிருக்கின்றார். மகிந்த ராஜபக்ச பதவியை துறந்திருக்கின்றார். இந்த வேளையில் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க இன்று அதியுயர் அதிகாரத்தில் இருக்கின்றார். இந்தக் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை தங்களது எதிர்காலத் தேர்தலுக்கான ஒரு அடித்தளமாக பரீட்சித்துப் பார்ப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் எந்தவொரு தேர்தலையும் தமிழ் மக்களின் ஆணையாகவும் எந்தளவிற்கு ஒற்றுமையாக இருந்து தங்களது பலத்தை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் தேர்தலாகவே ஒவ்வொரு தேர்தலையும் நோக்கிக்கொண்டிருக்கின்றோம். ஆந்த வகையில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சந்திக்கவிருக்கும் நேரத்திலே நாங்கள் பலமாக இருக்க வேண்டிய நேரத்தில் பலவீனப்படுகின்ற ஒரு நிலை எங்கள் மத்தியில் வந்திருக்கின்றது.

நீண்டகாலமாக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனது சொந்த அரசியலை செய்துகொண்டிருந்த ஹிஸ்புல்லா அவர்கள் தனது ஆரம்பகால கட்சியான முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அவர்களுடைய சமூகத்திற்காக ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்திலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் அனுசரணையில் முரண்பாடுகளுக்கு மத்தியிலிருந்த ஆயுதப்போராட்ட இயக்கங்களையும் மிதவாத இயக்கங்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்காக ஒருமித்த குரலாக பலமானதொரு அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது இருக்க வேண்டுமென்ற காரணத்தினால் 2001ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்டது.

முதலாவது தேர்தலை சூரியன் சின்னத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்தது. 18பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது 2004ஆம் ஆண்டிலே ஆனந்த சங்கரி ஐயாவிற்கும் ஏனையவர்களிற்கும் இடையிலே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் தன்னுடைய கட்சியையும் சின்னத்தையும் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமலிருந்த வீட்டுச் சின்னத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தூசுதட்டியெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக அறிமுகப்படுத்தியிருந்தார்கள். 2009ஆம்ஆண்டு மேமாதம் 18ஆம் திகதிவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபலமாக சக்தியாக இருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பின்னுக்கிருந்து ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருந்ததை நாங்கள் அனைவரும் அறிவோம். 2009ஆம் ஆண்டு மேமாதம் 18ற்குப் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகதலைமை சம்பந்தன் ஐயாவிடமும் கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியிடமும் சென்றது.

ன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்குமுகமாகவே பிரதிநிதித்துவத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டு வந்தது. ஈற்றிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே மூன்று கட்சிகள்தான் மீதமாக இருந்தன. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இருக்கின்றபோது இந்தவேளையில் நாங்கள் எங்கள் பலத்தை காட்டவேண்டிய நேரத்திலே புறிப்பாக இந்த நாடுபொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கும் நேரத்திலே இலங்கை அரசு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருக்கும் காலகட்டத்திலே இந்தத் தேர்தலிலே நாங்கள் ஒற்றுமையாக எங்கள் பலத்தை நிரூபித்துக்காட்டவேண்டிய தருணத்திலே இம்மூன்று கட்சிகளிலிருந்து இலங்கை தமிழரசுக் கட்சி தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றது. தாங்கள் தனித்துப் போட்டியிடுவது கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பிலே நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்திலே எடுக்கப்பட்ட தீர்மானம் என்று கூறுகின்றார்கள்.

ஆனால் அந்த மத்திய குழுக்கூட்டத்தை கூட்டுவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் அவர்கள் தாங்கள் தனித்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக யாழ்ப்பாணத்திலிருந்து அறிவித்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.

நாங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டிய இந்த இக்கட்டான நேரத்திலே பிரிந்து செல்வதென்பது தமிழ் மக்களுக்கு துரதிஷ்டவசமான காரியமாகவே இருக்கும். தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு பிரிந்து செல்லக்கூடாது,பிரிந்து சென்ற ஏனைய கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே உள்வாங்கி பொதுவான சின்னத்திலே ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி நாங்கள் பலமானதொரு சக்தி என்பதை வெளியுலகிற்கு காட்டவேண்டிய நேரத்திலே தமிழரசுக் கட்சி தனித்துச் செல்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகும்.அரசியல் ரீதியாக போராடுவதற்காகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய நோக்கம் இன்னும் முடிவுறவில்லை. தமிழ் மக்கள் இன்னும் தங்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக அமுல்படுத்தப்பட்ட மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களைக்கூட அரசு தரமறுத்துக்கொண்டிருக்கின்றது. அமுலாக்கப்பட்ட அதிகாரங்கள்கூட மீளப்பெறப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்குள்ளே இருந்த தமிழரசுக் கட்சிக்குள்ளேயிருந்த ஒருசிலரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக வெறுப்பு ஏற்பட்டு பிரிந்துசென்ற கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் கட்சி போன்ற கட்சிகளுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஜனநாயகப்போராளிகள் அமைப்புடன் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு இறுக்கமான தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு பேரியக்கமாக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கும் எதிர்வரும் தேர்தலில் இந்தக் கூட்டானது தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது, கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் யாராலும் அழிக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து அதன்மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான ஏற்பாட்டை செய்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் உள்வாங்கலாம்.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைப்பொறுத்த வரையில் தமிழ் தேசியத்திற்காக,வடகிழக்கு இணைப்பிற்காக,தமிழர்கள் வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் அரசியல் செய்யவில்லை,கட்சி நடாத்தவில்லை.பேரினவாதிகளுடன் இணைந்து அரசியல் செய்கின்றார்கள்,பேரினவாதிகளுடன் இணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.அவர்கள் அந்த மனோநிலையிலிருக்கும் வரைக்கும் தமிழ் தேசியம் சார்ந்தவர்களுடன் இணைந்து செயற்படுவது கடினமாகும்.

தொழில்நுட்ப ரீதியான திட்டம் என்று சுமந்திரன் எம்.பி கூறும் திட்டத்துடன் செயற்பட்டால் ஏழு எட்டு உறுப்பினர்களுக்காக பாரியளவிலான உறுப்பினர்களைக்கொண்ட வட்டாரங்களை இழக்கும் நிலையே ஏற்படும்.அந்த தொழில்நுட்ப ரீதியான செயற்பாடு எங்களுக்கு வீழ்ச்சியைத்தான் கொடுக்கும்.அதற்காக நாங்கள் கூறினோம் ஏனைய கட்சிகளையும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஒரு பலம்பொருந்திய அணியாக மாற்றிய கூடுதலான வாக்குகளைப்பெறும்போது அந்த வட்டாரமும் எங்களுக்கு கிடைக்கும் அதிகளவான வாக்குகளைப்பெறும்போது மேலும் உறுப்பினர்களைப்பெற்று நாங்கள் தனித்து ஆட்சியமைக்ககூடிய சூழ்நிலையுருவாகும்.ஆனால் தனித்தனியாக கேட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இல்லை.தமிழ் தேசியமும் இல்லை.

தனித்தனியாக தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றதை மறந்து தனிதனி கட்சிகளை முன்னிலைப்படுத்தும் நிலையுருவானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயர் அப்படியே இல்லாமல்போய்விடும். தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாவிட்டால் தமிழ் தேசியம் என்பதே இல்லாமல்சென்றுவிடும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக அதிக ஆசனத்துடன் இருக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் ஒரு சக்தியாக கருதி பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்.

ங்களுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் குரலாக எப்போது,யாரால்,எப்படி உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழிப்பதற்கு,அதனை இல்லாமல்செய்வதற்கு நாங்கள் எக்காரணம்கொண்டு துணைபோகமாட்டோம். 2004ஆம்ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா எப்படி தூக்கிச்சென்றாறோ அதேவேலையை இன்று 18வருடங்களுக்கு பின்னர் வீட்டுச்சின்னத்தையும் கட்சியையும் ஒரே கட்சியிலிருந்தவர்கள் தூக்கிச்செல்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் ஏதாவது கட்சியின் சின்னத்தில் கேட்டால் என்ன நடக்கும் என்பது இரண்டாவது தடவையாக நிரூபித்துகாட்டப்பட்டுள்ளது.தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றேன்.அந்தவேளையில் ஒரு பொதுவான சின்னம் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆனந்த சங்கரி செய்தததையே இன்று கூட்டமைப்புக்குள் இருப்போர் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி ஆதங்கம் 2004ஆம்ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா எப்படி தூக்கிச்சென்றாறோ அதேவேலையை இன்று 18வருடங்களுக்கு பின்னர் வீட்டுச்சின்னத்தையும் கட்சியையும் ஒரே கட்சியிலிருந்தவர்கள் தூக்கிச்சென்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பேரினவாதத்துடனேயே இணைந்து செயற்படும் என்பதனால் அவர்களுடன் எந்த கூட்டும் சேரமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம்,தமிழீழ விடுதலை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கந்தராஜா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.இந்த நாடு பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலிருக்கும்போது ஒரு தேர்தலை நாங்கள் சந்திக்கவிருக்கின்றோம். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதித்திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.ஒரு தரப்பு தேர்தலை நடத்தக்கூடாது என்றும் இன்னுமொரு தரப்பு தேர்தலை நடத்த வேண்டுமென்றும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் அரசியற் கட்சியாக தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு தேவைப்பாட்டுடன் இருக்கின்றோம்.வடகிழக்கிற்கு வெளியே உள்ள அரசியற் கட்சிகள் கடந்த கால அரசியல் சூழ்நிலையை ஒட்டி தங்களது பலத்தை பரீட்சித்துப்பார்க்கும் ஒரு தேர்தலாக இந்தத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.குறிப்பாக மொட்டுக் கட்சியின் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக்கப்பட்டிருக்கின்றார். மகிந்த ராஜபக்ச பதவியை துறந்திருக்கின்றார். இந்த வேளையில் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க இன்று அதியுயர் அதிகாரத்தில் இருக்கின்றார். இந்தக் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை தங்களது எதிர்காலத் தேர்தலுக்கான ஒரு அடித்தளமாக பரீட்சித்துப் பார்ப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.ஆனால் தமிழ் மக்கள் எந்தவொரு தேர்தலையும் தமிழ் மக்களின் ஆணையாகவும் எந்தளவிற்கு ஒற்றுமையாக இருந்து தங்களது பலத்தை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் தேர்தலாகவே ஒவ்வொரு தேர்தலையும் நோக்கிக்கொண்டிருக்கின்றோம். ஆந்த வகையில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சந்திக்கவிருக்கும் நேரத்திலே நாங்கள் பலமாக இருக்க வேண்டிய நேரத்தில் பலவீனப்படுகின்ற ஒரு நிலை எங்கள் மத்தியில் வந்திருக்கின்றது.நீண்டகாலமாக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனது சொந்த அரசியலை செய்துகொண்டிருந்த ஹிஸ்புல்லா அவர்கள் தனது ஆரம்பகால கட்சியான முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அவர்களுடைய சமூகத்திற்காக ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்திலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் அனுசரணையில் முரண்பாடுகளுக்கு மத்தியிலிருந்த ஆயுதப்போராட்ட இயக்கங்களையும் மிதவாத இயக்கங்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்காக ஒருமித்த குரலாக பலமானதொரு அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது இருக்க வேண்டுமென்ற காரணத்தினால் 2001ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்டது.முதலாவது தேர்தலை சூரியன் சின்னத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்தது. 18பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது 2004ஆம் ஆண்டிலே ஆனந்த சங்கரி ஐயாவிற்கும் ஏனையவர்களிற்கும் இடையிலே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் தன்னுடைய கட்சியையும் சின்னத்தையும் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமலிருந்த வீட்டுச் சின்னத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தூசுதட்டியெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக அறிமுகப்படுத்தியிருந்தார்கள். 2009ஆம்ஆண்டு மேமாதம் 18ஆம் திகதிவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபலமாக சக்தியாக இருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பின்னுக்கிருந்து ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருந்ததை நாங்கள் அனைவரும் அறிவோம். 2009ஆம் ஆண்டு மேமாதம் 18ற்குப் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகதலைமை சம்பந்தன் ஐயாவிடமும் கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியிடமும் சென்றது.அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்குமுகமாகவே பிரதிநிதித்துவத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டு வந்தது. ஈற்றிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே மூன்று கட்சிகள்தான் மீதமாக இருந்தன. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இருக்கின்றபோது இந்தவேளையில் நாங்கள் எங்கள் பலத்தை காட்டவேண்டிய நேரத்திலே புறிப்பாக இந்த நாடுபொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கும் நேரத்திலே இலங்கை அரசு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருக்கும் காலகட்டத்திலே இந்தத் தேர்தலிலே நாங்கள் ஒற்றுமையாக எங்கள் பலத்தை நிரூபித்துக்காட்டவேண்டிய தருணத்திலே இம்மூன்று கட்சிகளிலிருந்து இலங்கை தமிழரசுக் கட்சி தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றது. தாங்கள் தனித்துப் போட்டியிடுவது கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பிலே நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்திலே எடுக்கப்பட்ட தீர்மானம் என்று கூறுகின்றார்கள்.ஆனால் அந்த மத்திய குழுக்கூட்டத்தை கூட்டுவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் அவர்கள் தாங்கள் தனித்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக யாழ்ப்பாணத்திலிருந்து அறிவித்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.நாங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டிய இந்த இக்கட்டான நேரத்திலே பிரிந்து செல்வதென்பது தமிழ் மக்களுக்கு துரதிஷ்டவசமான காரியமாகவே இருக்கும். தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு பிரிந்து செல்லக்கூடாது,பிரிந்து சென்ற ஏனைய கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே உள்வாங்கி பொதுவான சின்னத்திலே ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி நாங்கள் பலமானதொரு சக்தி என்பதை வெளியுலகிற்கு காட்டவேண்டிய நேரத்திலே தமிழரசுக் கட்சி தனித்துச் செல்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகும்.அரசியல் ரீதியாக போராடுவதற்காகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய நோக்கம் இன்னும் முடிவுறவில்லை. தமிழ் மக்கள் இன்னும் தங்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக அமுல்படுத்தப்பட்ட மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களைக்கூட அரசு தரமறுத்துக்கொண்டிருக்கின்றது. அமுலாக்கப்பட்ட அதிகாரங்கள்கூட மீளப்பெறப்பட்டிருக்கின்றன.கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்குள்ளே இருந்த தமிழரசுக் கட்சிக்குள்ளேயிருந்த ஒருசிலரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக வெறுப்பு ஏற்பட்டு பிரிந்துசென்ற கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் கட்சி போன்ற கட்சிகளுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஜனநாயகப்போராளிகள் அமைப்புடன் பேசிக்கொண்டிருக்கின்றோம்.இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு இறுக்கமான தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு பேரியக்கமாக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கும் எதிர்வரும் தேர்தலில் இந்தக் கூட்டானது தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது, கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் யாராலும் அழிக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து அதன்மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான ஏற்பாட்டை செய்திருக்கின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிப்போம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் உள்வாங்கலாம்.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைப்பொறுத்த வரையில் தமிழ் தேசியத்திற்காக,வடகிழக்கு இணைப்பிற்காக,தமிழர்கள் வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் அரசியல் செய்யவில்லை,கட்சி நடாத்தவில்லை.பேரினவாதிகளுடன் இணைந்து அரசியல் செய்கின்றார்கள்,பேரினவாதிகளுடன் இணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.அவர்கள் அந்த மனோநிலையிலிருக்கும் வரைக்கும் தமிழ் தேசியம் சார்ந்தவர்களுடன் இணைந்து செயற்படுவது கடினமாகும்.தொழில்நுட்ப ரீதியான திட்டம் என்று சுமந்திரன் எம்.பி கூறும் திட்டத்துடன் செயற்பட்டால் ஏழு எட்டு உறுப்பினர்களுக்காக பாரியளவிலான உறுப்பினர்களைக்கொண்ட வட்டாரங்களை இழக்கும் நிலையே ஏற்படும்.அந்த தொழில்நுட்ப ரீதியான செயற்பாடு எங்களுக்கு வீழ்ச்சியைத்தான் கொடுக்கும்.அதற்காக நாங்கள் கூறினோம் ஏனைய கட்சிகளையும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஒரு பலம்பொருந்திய அணியாக மாற்றிய கூடுதலான வாக்குகளைப்பெறும்போது அந்த வட்டாரமும் எங்களுக்கு கிடைக்கும் அதிகளவான வாக்குகளைப்பெறும்போது மேலும் உறுப்பினர்களைப்பெற்று நாங்கள் தனித்து ஆட்சியமைக்ககூடிய சூழ்நிலையுருவாகும்.ஆனால் தனித்தனியாக கேட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இல்லை.தமிழ் தேசியமும் இல்லை.தனித்தனியாக தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றதை மறந்து தனிதனி கட்சிகளை முன்னிலைப்படுத்தும் நிலையுருவானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயர் அப்படியே இல்லாமல்போய்விடும். தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாவிட்டால் தமிழ் தேசியம் என்பதே இல்லாமல்சென்றுவிடும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக அதிக ஆசனத்துடன் இருக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் ஒரு சக்தியாக கருதி பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்.எங்களுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் குரலாக எப்போது,யாரால்,எப்படி உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழிப்பதற்கு,அதனை இல்லாமல்செய்வதற்கு நாங்கள் எக்காரணம்கொண்டு துணைபோகமாட்டோம். 2004ஆம்ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா எப்படி தூக்கிச்சென்றாறோ அதேவேலையை இன்று 18வருடங்களுக்கு பின்னர் வீட்டுச்சின்னத்தையும் கட்சியையும் ஒரே கட்சியிலிருந்தவர்கள் தூக்கிச்செல்கின்றனர்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் ஏதாவது கட்சியின் சின்னத்தில் கேட்டால் என்ன நடக்கும் என்பது இரண்டாவது தடவையாக நிரூபித்துகாட்டப்பட்டுள்ளது.தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றேன்.அந்தவேளையில் ஒரு பொதுவான சின்னம் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement