• May 20 2024

மசாஜ் நிலையத்தை அனுமதிக்க லஞ்சம் கோரிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / Jun 3rd 2023, 2:30 pm
image

Advertisement

கடவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் இருந்து 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிககளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மசாஜ் நிலையத்தின் செயற்பாடுகளை தடையின்றி தொடர்வதற்கு கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு வழங்குவதற்கென தெரிவித்து மசாஜ் நிலைய முகாமையாளரிடம் இவ்வாறு பணம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

மசாஜ் சென்டரின் முகாமையாளர் இதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று கடவத்தை பகுதியில் சோதனை நடத்தி, முகாமையாளரிடம் இருந்து உரிய தொகையை லஞ்சமாக காரொன்றுக்குள் வைத்து பெறும்போது  முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸில் கடமையாற்றும் போது கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சேவையை விட்டு விலகிய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.


மசாஜ் நிலையத்தை அனுமதிக்க லஞ்சம் கோரிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி. samugammedia கடவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் இருந்து 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிககளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மசாஜ் நிலையத்தின் செயற்பாடுகளை தடையின்றி தொடர்வதற்கு கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு வழங்குவதற்கென தெரிவித்து மசாஜ் நிலைய முகாமையாளரிடம் இவ்வாறு பணம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.மசாஜ் சென்டரின் முகாமையாளர் இதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று கடவத்தை பகுதியில் சோதனை நடத்தி, முகாமையாளரிடம் இருந்து உரிய தொகையை லஞ்சமாக காரொன்றுக்குள் வைத்து பெறும்போது  முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸில் கடமையாற்றும் போது கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சேவையை விட்டு விலகிய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement