• Nov 24 2024

தொலைபேசி இணைப்புகளை திருடி விற்பனை செய்த ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / May 24th 2024, 3:55 pm
image

வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ்  தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்பவியளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி இணைப்புகளை சந்தேக நபர்கள் இவ்வாறு திருடி விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ துனுவில பகுதியில் இருந்து கிரிமெட்டியான சந்தி வரையிலான 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலத்தடி ஊடாக புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புக்களே இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுநேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்த, ஆனமடுவ மற்றும் கொபேய்கேன் பகுதிகளைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 41 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


தொலைபேசி இணைப்புகளை திருடி விற்பனை செய்த ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை. வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ்  தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்பவியளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி இணைப்புகளை சந்தேக நபர்கள் இவ்வாறு திருடி விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.வென்னப்புவ துனுவில பகுதியில் இருந்து கிரிமெட்டியான சந்தி வரையிலான 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலத்தடி ஊடாக புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புக்களே இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுநேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்த, ஆனமடுவ மற்றும் கொபேய்கேன் பகுதிகளைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 41 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement