• May 19 2024

கனேடிய எம்.பி கரி ஆனந்தசங்கரியின் இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? samugammedia

Chithra / Jul 15th 2023, 7:33 am
image

Advertisement

இலங்கை அரசாங்கத்திற்கு பொருத்தமாக இருக்கும் போது பேச்சு சுதந்திரம் வெளிப்படையாக அனுமதிக்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பதால் இலங்கையின் தொடர்ச்சியான தோல்விகளை சரி செய்ய முடியாது.

இலங்கை அரசாங்கம் எனது விசாவை மறுத்துள்ளமை மனித உரிமை பணிக்கான பழிவாங்கல். நாங்கள் தொடர்ந்தும் எமது நீதி சார் பணிகளை செய்வோம் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கத்தினால் விசா மறுக்கப்பட்ட நிலையில், மரியோவின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் வகையில் மேலுள்ள தகவலை கரி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மரியோவின் ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சில வாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் சிங்கள போராட்டக்காரர்கள் பிழைகளால் நிரம்பிய தமிழ்ப்பலகைகளை வைத்து கனேடிய பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

தமிழின அழிப்பு நினைவு தினத்தை கனேடிய பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததால் இந்த வெறுக்கத்தக்க செயல் அரச சார்புடைய சக்திகளால் தெளிவாக திட்டமிடப்பட்டதாக தெரியவருகின்றது.

அண்மையில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கபட்டிருந்தன. இவை 2009 இல் இலங்கை அரசினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களாக இருக்கும் என தமிழ் அரசியல் மற்றும் சிவில் தலைவர்களும் கூறியிருந்தனர்.


இருப்பினும், ஆய்வில் தமிழின அழிப்புக்கான அதிக சான்றுகள் கிடைக்ககூடும் என கருதி சிங்கள அரசு இடை நிறுத்தியிருந்தது.

தமிழ் தலைமைகள், பன்னாட்டு குழுவினால் இந்த புதைகுழி ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டிருந்தது. ITPJ எனும் சர்வதேச நீதிக்கான அமைப்பு இலங்கை அரசால் கூட்டாக கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழிகள் முழுமையாக சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக கூறியிருந்தது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சென்று பாதிக்கபட்ட மக்களிடம் மற்றும் பொது அமைப்புகளுடன் நேரடியாக சந்தித்து உண்மை நிலவரங்களை வெளியுலகுக்கு கொண்டு வரும் முயற்சியில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சிங்கள அரசு இந்த தடையை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழரின் நிலங்கள் இலங்கை அரசினால் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது.அத்துடன் தமிழின அழிப்புக்கான தடயங்களை இலங்கை அழித்து வருகின்றது.

இந்த நிலையில் கனேடிய அரசியல் தலைவர்கள் இலங்கையை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு தமிழின அழிப்பு குற்றங்களுக்காக கனடா பாரப்படுத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

மேலும், கரி ஆனந்தசங்கரி மீதான இலங்கை அரசின் நுழைவு தடையானது தமிழின அழிப்பிற்காக சர்வதேச நீதியை தள்ளி போடலாம் என்ற எண்ணத்துடன் சிங்கள அரசு செய்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும் சர்வதேச கடன் நெருக்கடியில் இருக்கும் இலங்கை தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியை நீண்ட காலம் தடுக்க முடியாது. புலம்பெயர் தமிழர்களின் உறுதியான செயற்பாடுகள் நீதிக்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

இதேவேளை, கரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கனேடிய எம்.பி கரி ஆனந்தசங்கரியின் இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டமைக்கான காரணம் என்ன samugammedia இலங்கை அரசாங்கத்திற்கு பொருத்தமாக இருக்கும் போது பேச்சு சுதந்திரம் வெளிப்படையாக அனுமதிக்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பதால் இலங்கையின் தொடர்ச்சியான தோல்விகளை சரி செய்ய முடியாது.இலங்கை அரசாங்கம் எனது விசாவை மறுத்துள்ளமை மனித உரிமை பணிக்கான பழிவாங்கல். நாங்கள் தொடர்ந்தும் எமது நீதி சார் பணிகளை செய்வோம் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.அண்மையில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கத்தினால் விசா மறுக்கப்பட்ட நிலையில், மரியோவின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் வகையில் மேலுள்ள தகவலை கரி வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் மரியோவின் ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சில வாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் சிங்கள போராட்டக்காரர்கள் பிழைகளால் நிரம்பிய தமிழ்ப்பலகைகளை வைத்து கனேடிய பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர்.தமிழின அழிப்பு நினைவு தினத்தை கனேடிய பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததால் இந்த வெறுக்கத்தக்க செயல் அரச சார்புடைய சக்திகளால் தெளிவாக திட்டமிடப்பட்டதாக தெரியவருகின்றது.அண்மையில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கபட்டிருந்தன. இவை 2009 இல் இலங்கை அரசினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களாக இருக்கும் என தமிழ் அரசியல் மற்றும் சிவில் தலைவர்களும் கூறியிருந்தனர்.இருப்பினும், ஆய்வில் தமிழின அழிப்புக்கான அதிக சான்றுகள் கிடைக்ககூடும் என கருதி சிங்கள அரசு இடை நிறுத்தியிருந்தது.தமிழ் தலைமைகள், பன்னாட்டு குழுவினால் இந்த புதைகுழி ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டிருந்தது. ITPJ எனும் சர்வதேச நீதிக்கான அமைப்பு இலங்கை அரசால் கூட்டாக கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழிகள் முழுமையாக சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக கூறியிருந்தது.கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சென்று பாதிக்கபட்ட மக்களிடம் மற்றும் பொது அமைப்புகளுடன் நேரடியாக சந்தித்து உண்மை நிலவரங்களை வெளியுலகுக்கு கொண்டு வரும் முயற்சியில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார்.ஆனால் உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சிங்கள அரசு இந்த தடையை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.தமிழரின் நிலங்கள் இலங்கை அரசினால் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது.அத்துடன் தமிழின அழிப்புக்கான தடயங்களை இலங்கை அழித்து வருகின்றது.இந்த நிலையில் கனேடிய அரசியல் தலைவர்கள் இலங்கையை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு தமிழின அழிப்பு குற்றங்களுக்காக கனடா பாரப்படுத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்துள்ளனர்.மேலும், கரி ஆனந்தசங்கரி மீதான இலங்கை அரசின் நுழைவு தடையானது தமிழின அழிப்பிற்காக சர்வதேச நீதியை தள்ளி போடலாம் என்ற எண்ணத்துடன் சிங்கள அரசு செய்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.இருப்பினும் சர்வதேச கடன் நெருக்கடியில் இருக்கும் இலங்கை தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியை நீண்ட காலம் தடுக்க முடியாது. புலம்பெயர் தமிழர்களின் உறுதியான செயற்பாடுகள் நீதிக்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்இதேவேளை, கரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement