• Nov 19 2024

தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் செய்யக் கூடாதது - வெளியான அறிக்கை

Chithra / Sep 19th 2024, 4:16 pm
image

 

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைசெய்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் அல்லது அந்த வாக்கெடுப்பு நிலையத்திற்குள் பிரவேசிக்கும் வாயிலில் இருந்து அரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தடை செய்யப்பட்டுள்ள செயல்களை செய்பவர்கள் தண்டனைக்குள்ளாகலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள், 

1.வாக்களிக்குமாறு இரந்து கேட்டல்

2.எவரேனும் தேருநரின் வாக்கைப் பரிந்து கேட்டல்

3.குறிப்பிட்ட எவரேனும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென்று எவரேனும் நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல்

4.தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல்

5. தேர்தல் தொடர்பான, (யாதேனும் அலுவலக முறையிலான துண்டுப் பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, புகைப்படம், சித்திரம் அல்லது அறிவித்தல் எதனையும் தவிர்ந்த) யாதேனும் நுண்டுப் பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, புகைப்படம் அல்லது சித்திரம் அல்லது அறிவித்தல் அல்லது எவரேனும் வேட்பாளருக்கு குறித்தொதுக்கப்பட்ட சின்னம் எதனையும் விநியோகித்தல் அல்லது காட்சிக்கு வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் செய்யக் கூடாதது - வெளியான அறிக்கை  எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைசெய்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தேர்தல் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் அல்லது அந்த வாக்கெடுப்பு நிலையத்திற்குள் பிரவேசிக்கும் வாயிலில் இருந்து அரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தடை செய்யப்பட்டுள்ள செயல்களை செய்பவர்கள் தண்டனைக்குள்ளாகலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள், 1.வாக்களிக்குமாறு இரந்து கேட்டல்2.எவரேனும் தேருநரின் வாக்கைப் பரிந்து கேட்டல்3.குறிப்பிட்ட எவரேனும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென்று எவரேனும் நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல்4.தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல்5. தேர்தல் தொடர்பான, (யாதேனும் அலுவலக முறையிலான துண்டுப் பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, புகைப்படம், சித்திரம் அல்லது அறிவித்தல் எதனையும் தவிர்ந்த) யாதேனும் நுண்டுப் பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, புகைப்படம் அல்லது சித்திரம் அல்லது அறிவித்தல் அல்லது எவரேனும் வேட்பாளருக்கு குறித்தொதுக்கப்பட்ட சின்னம் எதனையும் விநியோகித்தல் அல்லது காட்சிக்கு வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement