இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு விரைவில் பாராளுமன்ற தேர்தலைக் காண முடியும் எனவும் ஒருவேளை நவம்பர் இறுதிக்குள் தேர்தல் இடம்பெறலாம் எனவும் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகளின் இறுதி எண்ணிக்கையின் பின்னர், தனது வெற்றி உரையின் போது, பாராளுமன்றத் தேர்தலுக்கான சரியான காலக்கெடுவை உறுதிப்படுத்தாமல் நிறுத்திய போதிலும் இதனை சுட்டிக்காட்டினார்.
அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நபரான பிமல் ரத்நாயக்க, விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதி தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் பாராளுமன்றத்தைக் கலைத்தால், தேர்தலுக்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெறலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நவம்பர் இறுதியில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு விரைவில் பாராளுமன்ற தேர்தலைக் காண முடியும் எனவும் ஒருவேளை நவம்பர் இறுதிக்குள் தேர்தல் இடம்பெறலாம் எனவும் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகளின் இறுதி எண்ணிக்கையின் பின்னர், தனது வெற்றி உரையின் போது, பாராளுமன்றத் தேர்தலுக்கான சரியான காலக்கெடுவை உறுதிப்படுத்தாமல் நிறுத்திய போதிலும் இதனை சுட்டிக்காட்டினார்.அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நபரான பிமல் ரத்நாயக்க, விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதி தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் பாராளுமன்றத்தைக் கலைத்தால், தேர்தலுக்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெறலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.