• May 19 2024

காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் செல்பி எடுத்தால் எப்படி இருக்கும்..? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் AI புகைப்படங்கள்! SamugamMedia

Tamil nila / Mar 26th 2023, 8:20 pm
image

Advertisement

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் Midjourney உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன.


அந்த வகையில், மாதவ் கோலி என்ற ஓவியர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த இந்தியாவின் பழங்கால அரசர்களின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக்கூட வகுப்பில் கற்பனையால் மனதில் வரைந்த சத்ரபதி சிவாஜி, அசோகர், அக்பர், சந்திரகுப்த மௌரியர், அலாவுதீன் கில்ஜி என அந்தக் காலத்து அரசர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவம் கொடுத்திருந்தார்.


இதே போல், நாய்கள், குரங்குகள், பூனைகள், பச்சோந்திகள் போன்ற உயிரினங்கள் இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றினால் எப்படி இருக்கும் எனச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஜெயேஷ் சச்தேவ் என்ற ஓவியர் கற்பனையில் விளையாடியிருந்தார்.



அவரின் வெள்ளை நிற பூக்களுடன் விண்வெளி வீரங்கணை, இந்தியாவின் பாரம்பரிய நகைகள் போன்றவை படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. மேலும், மிக்கி மவுஸிற்கு இந்தியாவில் திருமணம் நடந்தால் எவ்வாறு இருக்கும் என்ற அவரது கியூட் கற்பனை, வெளிநாட்டினரையும் கவர்ந்தது.


சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து ஜூரம் ரசிகர்களுக்கு பிடித்திருந்த நிலையில், மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் முதுமையில் இப்படித்தான் இருப்பார்கள் என, பத்திரிக்கையாளர் Paul Parsons, பகிர்ந்த புகைப்படங்கள், பேன்ஸ்களுக்கு தீனி போட்டது. இதே போல், திரைப்பிரபலங்களின் வித்தியாசமான செயற்கை நுண்ணறி ஓவியங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டாடித் தீர்த்தனர்.



இதே போல் தற்போது, பல தசாப்தங்களுக்கு முன்பு வாழ்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களை செல்பி எடுத்துக்கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை ஓவியங்களாக வெளிவந்துள்ளன. ஜியோ ஜான் முள்ளூர் என்ற கலைஞர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், அன்னை தெரசா, எல்விஸ் பிரெஸ்லி உள்ளிட்டோரின் இந்த செல்பிக்களுக்கு உயிரூட்டியுள்ளார்.


காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் செல்பி எடுத்தால் எப்படி இருக்கும். ஆச்சரியத்தில் ஆழ்த்தும் AI புகைப்படங்கள் SamugamMedia செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் Midjourney உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன.அந்த வகையில், மாதவ் கோலி என்ற ஓவியர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த இந்தியாவின் பழங்கால அரசர்களின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக்கூட வகுப்பில் கற்பனையால் மனதில் வரைந்த சத்ரபதி சிவாஜி, அசோகர், அக்பர், சந்திரகுப்த மௌரியர், அலாவுதீன் கில்ஜி என அந்தக் காலத்து அரசர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவம் கொடுத்திருந்தார்.இதே போல், நாய்கள், குரங்குகள், பூனைகள், பச்சோந்திகள் போன்ற உயிரினங்கள் இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றினால் எப்படி இருக்கும் எனச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஜெயேஷ் சச்தேவ் என்ற ஓவியர் கற்பனையில் விளையாடியிருந்தார்.அவரின் வெள்ளை நிற பூக்களுடன் விண்வெளி வீரங்கணை, இந்தியாவின் பாரம்பரிய நகைகள் போன்றவை படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. மேலும், மிக்கி மவுஸிற்கு இந்தியாவில் திருமணம் நடந்தால் எவ்வாறு இருக்கும் என்ற அவரது கியூட் கற்பனை, வெளிநாட்டினரையும் கவர்ந்தது.சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து ஜூரம் ரசிகர்களுக்கு பிடித்திருந்த நிலையில், மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் முதுமையில் இப்படித்தான் இருப்பார்கள் என, பத்திரிக்கையாளர் Paul Parsons, பகிர்ந்த புகைப்படங்கள், பேன்ஸ்களுக்கு தீனி போட்டது. இதே போல், திரைப்பிரபலங்களின் வித்தியாசமான செயற்கை நுண்ணறி ஓவியங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டாடித் தீர்த்தனர்.இதே போல் தற்போது, பல தசாப்தங்களுக்கு முன்பு வாழ்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களை செல்பி எடுத்துக்கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை ஓவியங்களாக வெளிவந்துள்ளன. ஜியோ ஜான் முள்ளூர் என்ற கலைஞர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், அன்னை தெரசா, எல்விஸ் பிரெஸ்லி உள்ளிட்டோரின் இந்த செல்பிக்களுக்கு உயிரூட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement