• May 03 2024

எந்த சின்னத்தில் போட்டியிடுவது? வடிவேலு பாணியில் ஆராயும் ரணில்...!

Sharmi / Apr 12th 2024, 12:48 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தான் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

ஜனாதிபதி தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு, யானை மற்றும் அன்னம் ஆகிய சின்னங்கள் இல்லாமல் பொதுச் சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பொதுச் சின்னமாக இருந்தால் ஜனாதிபதியை ஆதரிக்க பல தரப்புகளும் முன்வந்துள்ளதால் தற்போது அந்தச் சின்னம் பற்றி ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். 

சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் என்பன உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்கான ஆலோசனை குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்த சின்னத்தில் போட்டியிடுவது வடிவேலு பாணியில் ஆராயும் ரணில். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தான் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு, யானை மற்றும் அன்னம் ஆகிய சின்னங்கள் இல்லாமல் பொதுச் சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுச் சின்னமாக இருந்தால் ஜனாதிபதியை ஆதரிக்க பல தரப்புகளும் முன்வந்துள்ளதால் தற்போது அந்தச் சின்னம் பற்றி ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் என்பன உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்கான ஆலோசனை குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement