• May 04 2024

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ஜெனிவாவில் ஏன் யாரும் பேசவில்லை? – உறவுகள் கண்ணீருடன் கேள்வி SamugamMedia

Chithra / Feb 28th 2023, 6:18 pm
image

Advertisement

ஜெனிவாவின் 52ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஏன் தமிழினப் படுகொலை தொடர்பாக மௌனம் காப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி த.செல்வராணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜெனிவாவின் 52ஆவது கூட்டத்தொடர் 45 நாடுகளின் அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க வந்துள்ள நிலையில் உக்ரைன் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மட்டுமே கலந்துரையாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் 1 இலட்சத்து 45000 ஆயிரம் உறவுகளை நாம் இழந்திருக்கின்றோம். அந்த இனப்படுகொலை பற்றி ஜெனிவாவில் பேசப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே உலக நாடுகளின் அமைச்சரிகளிடம் கெஞ்சிக்கேட்பது என்னவெனில் இலங்கை நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுமாறு த.செல்வராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனியும் காலம் கடத்தாது விரைவாக தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கண்ணீருடன் உறவுகள் வேண்டி நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ஜெனிவாவில் ஏன் யாரும் பேசவில்லை – உறவுகள் கண்ணீருடன் கேள்வி SamugamMedia ஜெனிவாவின் 52ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஏன் தமிழினப் படுகொலை தொடர்பாக மௌனம் காப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி த.செல்வராணி கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.ஜெனிவாவின் 52ஆவது கூட்டத்தொடர் 45 நாடுகளின் அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க வந்துள்ள நிலையில் உக்ரைன் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மட்டுமே கலந்துரையாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கையில் இறுதி யுத்தத்தில் 1 இலட்சத்து 45000 ஆயிரம் உறவுகளை நாம் இழந்திருக்கின்றோம். அந்த இனப்படுகொலை பற்றி ஜெனிவாவில் பேசப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே உலக நாடுகளின் அமைச்சரிகளிடம் கெஞ்சிக்கேட்பது என்னவெனில் இலங்கை நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுமாறு த.செல்வராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இனியும் காலம் கடத்தாது விரைவாக தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கண்ணீருடன் உறவுகள் வேண்டி நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement