புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பகஹவெவ கிராமத்தில் இன்று அதிகாலை (06) புகுந்த காட்டு யானையொன்று வீடு ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
பாரிய சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டை உடைத்து , வீட்டில் இருந்த நெல் மூடைகளை வெளியே எடுத்ததாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.
வீட்டினுள் இருந்த தாம் பாரிய அளவில் கூச்சலிட்ட போது அயலவர்கள் அங்கு வருகை தந்து குறித்த காட்டு யானையை விரட்டியடித்ததாகவும் வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார்.
மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இரவானதும் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே காட்டு யானைகளை இப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புத்தளத்தில் வீட்டை உடைத்து நெல் மூடைகளை வெளியே எடுத்த காட்டு யானை புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பகஹவெவ கிராமத்தில் இன்று அதிகாலை (06) புகுந்த காட்டு யானையொன்று வீடு ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.பாரிய சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டை உடைத்து , வீட்டில் இருந்த நெல் மூடைகளை வெளியே எடுத்ததாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.வீட்டினுள் இருந்த தாம் பாரிய அளவில் கூச்சலிட்ட போது அயலவர்கள் அங்கு வருகை தந்து குறித்த காட்டு யானையை விரட்டியடித்ததாகவும் வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார்.மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இரவானதும் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே காட்டு யானைகளை இப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.